Sunday, March 22, 2009

மீண்டும் உங்களை

assingmnt அது இதுவென note எழுத முடியாமல் போய்விட்டது, ஆர்த்திகா அஹல்யா என பள்ளிக்காலங்களின் posh துண்டெல்லாம் (sleeveless அணிவது local olல் மிதமிஞ்சிய கவர்ச்சி ), என் friend listல் உள்ளதை இட்டு மகிழ்ச்சி, ஆனந்தன் sir classக்கு விடிய காலமை எழும்பி போனால் எல்லாம் இழுத்திப்போர்த்திக்கொண்டு வந்து கடுப்பேற்றுவாளுகள். அப்படி எங்களை கடுப்பேற்றும் uniform வைக்காததையிட்டி LC க்கு மனங்கனிந்த பாராட்டுக்கள், இருந்தாலும் busல் போற LC பெட்டையளுக்கு deodrant பற்றிய விழிப்புணர்வு அவசியம், ஏனெனில் அந்த நரக வேதனை அனுபவித்தவனுக்கே தெரியும். சரி இனி என் நண்பன் பிரிந்தனுக்கும் எனக்குமான நட்பை பற்றி

yr8 s class, பெண்கள் மேல் ஒரு ஈர்ப்பு வந்த ஒரு காலகட்டம். நானும் விழும் வலை தெரியாமல் classக்குப்போனேன். அங்கே கிருஷ்ணமூர்த்தி பஞ்சபூதமாகி எல்லோரையும் ஒரு கை பார்க்கும், அவா அடிக்கு பயந்தே நான் நடு rowல் இருப்பேன். அந்த classல் இருந்த தத்து பித்து துண்டுகளுக்கு நடுவே ஒரு extra ordinary துண்டாய் சி-- தா-- திகழ்ந்தாள். சரி line போடலாம் என நினைக்கும் போது , பக்கத்தில் இருந்தவன் சொன்னான் machan அது எண்ட துண்டு yr7ல இருந்து tryபண்ணுறன் எண்டு, அவன் வேறு யாருமல்ல நம் உற்ற நண்பன் பி-ந்-ன் தான், சரி இவன் என்னவிட personalityயாக இருக்கிறான் என நினைத்தபோதுதான் அவள் அவனின் பக்கத்த்து வீடு என்று சொன்னான் geographically அவனுக்கு advantage இருந்ததால் நான் widraw பண்ணிக்கொண்டு, மச்சான் help வேண்டுமென்றால் சொல் என்றேன். அப்படி தொடங்கியதே எமது புனிதமான நட்பு, அவன் அந்த துண்டை பிறகு மாட்டியதும் 2007 மட்டும் அந்த துண்டு இருந்ததும் ஒரு சாதனை, எனக்கு தெரிந்து அவ்வளவு காலம் ஒரே துண்டை வைத்திருந்தவன் கிடையாது, எனவே அவனை நினைத்து பெருமை அடைகிறேன். அவனும் நான் அவனுக்கு yr 7 ,8ல் கொடுத்த துண்டு மாட்டுவதற்கான எனது ஆலோசனைகளை மறந்திருக்க மாட்டான் என எண்ணுகிறேன்.:)

yr 9ல் எமக்கு முகப்பருக்கள் வந்த போது நாம் personality பற்றி கவலைப்பட்ட காலத்தில் என் class மாணவ்ர்கள் பாவித்த beauty tipsஐ இங்கு பகிரலாம் என்று இருக்கிறேன். கருணாநிதி sir ஏதோ acid பாவிச்சால் pimples போகும் என கூற அதை அளவுக்கதிகம் பாவித்து முகத்தை சுட்டுக்கொண்டவர்கள் ஏராளம், நான் எந்த பாதிப்புமின்றி இருப்பதைக்கண்டு andrewதான் நீ மஞ்சள் பூசுகிறாய் தானே என்றான், நான் இல்லை சந்தனம் என என் ரகசியத்தை போட்டு உடைத்தேன், அன்று என் நண்பர்கள் பலர் நான் இதை அவர்களுக்கு சொல்லவில்லை என கோபித்துக்கொண்டனர், பின்னர் அவர்கள் வீட்டிலும் சந்தனகாண்டம் அரங்கேறியது. ஒருவன் butterscotch apply பண்ணினான், ஒருமுறை நான் அவன் வீடு தேடி போனபோது பக்கத்துவீட்டுப்பிள்ளை அந்த பச்சைக்கலர் அண்ணாதானே என்று கேட்குமளவிற்கு butterscotchடன் வலம் வந்தான், என் சந்தன் ideaவையே modify பண்ணி கஷ்டப்பட்டு அதில் rose,ம்ற்றும் இதர பொருட்களை அரைத்துப்போட்டு துரிதகதியில் அழகாக முற்பட்டவர்கள் நிலை அந்தோ பரிதாபம். வெள்ளவத்தையில் விற்கும் சந்தனம் கலப்படம் அதனால் முகம் எரிகிறது என ம்யூரா கோவிலடி மட்டும் நடந்து போய் தூய சந்தனம் வாங்க வைக்குமளவிற்கு சந்தன fever தொற்றிக்கொண்டது, clear white என்று ஒரு soap இருக்கு போட்ட உடனே வெள்ளை ஆகலாம் என ஒரு பரதேசியின் சொல் கேட்டு அதை பாவித்ததில் என் நெற்றியின் இரு மூலையிலும் dead skin!!!! அவனை ஏசப்போனால் அவன் முகம் முழுவதுமே ரணகளமாயிருந்தது, ஒரு உச்சுக்கொட்டிவிட்டு நாம் மீண்டும் சந்தனத்திற்கே கட்சி மாறினோம். பிறகு ஒரு fairness creamஐ random ஆக பாவிக்கத்தொடங்கி results அமோகமாக வர நண்பர்கள் அனைவரும் classroomல் புடைசூழ நின்று “சொல்லடா”, என மிரட்டியபோது என் ரகசியத்தை வெளியே விடாமல் ச்ந்தனம் மஞ்சள் கலந்து என வாயில் வந்ததை எடுத்து விட்டேன், அவர்களும் நம்ப ரகசியம் காப்பாற்றப்பட்டது. பின்னர் தான் nomarks soap சந்தைக்கு வந்தது. அதன் results நன்றாக இருந்தது. (அது வருமுன் காக்கும் வந்ததை போக்குவது கஷ்டம்). வெள்ளவத்தை pharmacyல் விற்கும் அதை எனக்குத்தெரிந்து எங்கள் class girlsஐ விட boysதான் அதிகம் purchase பண்ணீனார்கள்(AL வகுப்புகளில் ஆண்களீன் முகப்பருக்கள் பெண்களை விட குறைந்திருந்ததை நீங்கள் அவதானித்திருப்பீர்கள்). நாளுக்கு 2 முறை கரட் juice தவறாமல் அனைவரும் பருகினோம்(carrot பிடிக்காதவர்கள் மற்ற பழ வகை சாறுகளை விழுங்கினர்). முகப்பரு வராமல் இருக்க OLல் chocalate item சாப்பிடுவதை நிறுத்தும் வழக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதை இன்னும் யார் யார் பின்பற்றுகிறார்களோ தெரியவில்லை ஆனால் நான் பின்பற்றுகிறேன். இதை விட extremeஆகி மாதாமாதம் facial செய்பவனையும் எனக்கு தெரியும். nomarks ன் புதிய கண்டுபிடிப்பான one day pimple cure வந்தவுடன் பெண்களை விட எங்கள் classல் ஆண்களே அதை வரப்பிரசாதமாக க்ருதினர், ஆனால் என்ன அது ஒரே நாளில் pimplesஐ போக்கி dead skinஐ கொண்டு வரும், ஆகவே சந்தனமே மிகச்சிறந்த வரப்பிரசாதமாக மீண்டும் அதன் ஸ்தானத்தை பிடித்துக்கொண்டது. இன்னும் பல சிறு சிறு beauty secretsஐ classல் ஒவ்வொருவனும் வைத்திருந்தான், ஒருமுறை நான் ஒருவன் வீட்டிற்கு போனபோது அவன் பாலாடையால் மூடிய முகத்தைக்கண்டு பயந்து விட்டேன் , classல் வேறு யாருக்கும் இந்த beauty tips leak ஆக்கப்படாது என சத்தியம் வாங்கினான். முகம் செழிப்பாக வர ஒவ்வொரு நாளும் காலை தயிருடன் தேனைக்கலந்து சாப்பிடும் வழக்கமும் புழக்கத்திலிருந்தது, என் தங்கை அதை ஒருநாள் சாப்பிட்டு இந்த இழவை எப்படி சாப்பிடுகிறாய் என கேட்டாள். அதை தொடர்ந்து சாப்பிட்டு சளீ பிடித்ததால் அதை ஒன்று விட்டு ஒருநாள் சாப்பிட்டு பொதுநலம் கருதி அதை நண்பர்களுக்கும் சொன்னேன் :)

class ஆண்களே அழகு விஷயத்தில் இவ்வளவு கஷ்டப்பட்டு ஆராய்ச்சி செய்து செயற்பட்டபோது பெண்கள் எவ்வளவு செய்திருப்பார்கள் நினைக்கவே கண்ணைக்கட்டுகிறது!!!!!

By
JEEVA

No comments:

Post a Comment