1) எழாம் வகுப்பில் எங்களை விட 2 அடி உயர்ந்த சக மாணவிகளையும்
2) மச்சான் நாளைக்குத்துண்டுக்கு birthday ,gold chain வாங்கினால் ந்ல்லா இருக்கும், என்னட்ட 50 ரூபா தான் இருக்கு என்று நீங்கள் வசனத்தை முடிக்க காத்திருக்கும் நண்பர்களையும்
3) LC,HFC துண்டுகளிடம் கடலை போட , free periodல் உங்களிடம் spoken english படிக்கும் தோழர்களையும்
4) எங்கள் மேல் உள்ள நம்பிக்கையால் மகள் class முடிய மட்டும் வெளியே கால் கடுக்க நிற்கும் அம்மாக்களையும்
5) யாராவது அழகான பெண்ணை நினைத்துவிட்டால், உடனே call பண்ணி அதே துண்டுக்கு line போடுறன், help பண்ணு என கேட்கும் சக மாணவனையும்
6) goya red rose, மற்றும் ஜவ்வாது சகிதம் classக்கு வந்து நாங்கள் குளிக்காமல் directஆ schoolஆல் வந்ததை நினைவுறுத்தும் பெண்களையும்
7)யாராவது அழகிய துண்டுடன் பேசி விட்டால் அன்றிரவே உங்களுக்கு phone போட்டு,” அது என்ட துண்டு , இனி பேசினால் நடக்கிறது வேற” என மிரட்டும் ஆசாமிகளையும்
8)நள்ளிரவு எழுப்பி , உங்களை துணைக்கு அழைத்து சென்று, அவன் காதலி வீட்டு சுவரில் spray paint ஆல் காவியம் எழுதும் நாயகர்களையும்
9) one side love, தொடங்கியதும் , நான் உன்னை சந்தித்தது கொழும்பு தமிழ் சங்கம், பூப்போன்ற மென்மை உன் அங்கம், அன்பே நீ ஒரு தங்கம் என கவிதையின் பெயரால் எதையோ பிதற்றி நாங்கள் அதற்கு உச்சு கொட்ட வேண்டும் என நினைப்பவனையும்
10)யாராவது வந்துவிடுவினம் நான் போகோணும் என்று தொடக்கம் முதலே சொல்லி 3 மணி நேரமாவது தொடர்ந்து கடலை போடும் நண்பனின் காதலியையும்
11)அந்த 3 மணி நேரமும் வெறும் 2 rolls 1 coke மட்டுமே வாங்கி கொடுத்து கணக்கை சமாளித்த தோழனையும்
12)என்று படிக்கும் வைராக்கியத்துடன் classக்கு போகிறோமோ அன்று பார்த்து கடைக்கண்ணால் சிரித்து message சொல்லி hopes கொடுக்கும் அழகிய பெண்களையும்
13) pocket money தட்டுப்பாட்டில் royal bakery 10 ரூபா rolls சாப்பிடலாம் என்று நினைக்கும் நாளில் bombay sweetsக்கு faluda குடிக்க போகலாமா என கேட்கும் சக மாணவிகளையும்
14) எப்படியடா மாட்டினான் என புரியாத புதிராக, உங்கள் classன் அழகான பெண்ணின் காதலனான அந்த கேனையனையும்
15) english speakin துண்டுகளுடன் பழகும் effectல் தமிழ் speaking to english speaking ஆக overnight ல் மாறிய தத்துப்பித்து english பேசும் துண்டுகளையும்
16) ஆனந்தன் sir 7-8 classல் துண்டுகள் நிறைய என்பதால் p.u.c card exchange பண்ண துடிக்கும் மற்ற batch மாணவர்களையும்
17) 05 batchல் நிறைய வடிவான துண்டுகள் இருப்பதால், வர்ணம் sir class முடியும் போது வாசலில் காத்திருக்கும் seniorஅண்ணாக்களையும் junior தம்பிகளையும்
18)அவள் உன்னைப்பார்த்தாளடா, சிரிச்சாளடா என உசுப்பேத்தி treat வாங்க துடிக்கும் அன்பர்களையும்
19) சாலையில் அவள் போனால் நானும் எதிரில் வந்தேன் என 1நிமிடம் அவள் கடந்து எதிரில் போனதை 1 நாள் முழுக்க ஒசாமா ஒபாமா சந்தித்தது போல விளக்கும் சக மாணவனையும்
20) இன்று என் love சொல்லப்போறேன் என்று சொல்லி வீறு நடை போட்டுச்சென்று சொல்லாமலே சுவற்றில் அடித்த பந்து போல் திரும்பி நடந்து வ்ந்து கடுப்பேற்றுபவனையும்
நீங்களும் என்னைப்போல் பாடசாலை நாட்களில் கடந்து வந்திருப்பீர்கள்
பௌர்ணமிக்காக....
17 years ago
No comments:
Post a Comment