Friday, March 27, 2009

ஜீவா விடு தூது!!!!

எங்கள் classன் அந்த அழகிய பெண் rolls சாப்பிடும் styleஐ அப்படியே பார்த்துக்கொண்டு இருக்கலாம். ஒரு மாலை நேரம் அவள் அந்த rollsஐ வாய்க்கருகில் கொண்டு வந்து வாயை மெதுவாக திறந்து சிறிதளவு பாகத்தை மட்டும் மெதுவாக கடித்து அதை அவள் நாவினால் வலதும் இடதுமாக தள்ளி தள்ளி விளையாடி சாப்பிடும்போது பார்த்துக்கொண்டிருக்கும் class பொடியளின் இதயமும் வலதும் இடதுமாக இடம்பெயரும் ஒரு feel.....;)

அந்த கண்கொள்ளாக்காட்சி நடைபெறும் போது நாரசாரமாக ஒரு இடையூறு

“மச்சான்”
”என்னடா”
“நான் அவளுக்கு try ஒன்டு போடலாம் எண்டு இருக்கிறன்”
”யாருக்கு ----கா??”
அவளை இவன் love பண்ணுவது நடவாத காரியம் என்றதாலேயே அதிர்ச்சியுடன் அந்த கேள்வியை கேட்டேன்

“இல்ல மச்சான் அவளுக்கு பக்கத்துல styleஆ eclair சாப்பிடுறாளே”
அவன் சொன்ன திசை நோக்கிப்பார்த்தேன். அழகான பெண்தான் ஆனால் அவள் eclair சாப்பிடுவது discovery channel ல் ஒட்டகம் வெறும்வாயை மெல்லும் போது closeupல் பார்த்திருப்பீர்களே அதைப்போலத்தான் இருந்தது.
“அதுல என்னடா இழவு styleee?” நான் அதிர்ச்சியுடன் கேட்டேன்
”சும்மா இரு”

பிறகு தொடங்கியது படலம் அவன் அவள் detail தேடி அலைந்ததும் class முடிய followபண்ணுவதுமாக அவன் காலத்தை ஓட்டி கடைசியில் காதலை சொல்வதென முடிவெடுத்தான். இங்குதான் நாம் நம்மவர்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும், follow பண்ணும்போதும் அவளுக்காக தெருச்சண்டைகளில் இறங்கும்போது உள்ள தைரியம் அவளிடம் காதலை சொல்லப்போகும்போது காணாமல் போய்விடும், காதலைச்சொல்ல அவளருகில் சென்று நாக்குத்தள்ளி இன்னொருநாள் சொல்வோம் என பயத்துடன் திரும்பியவர்கள் ஏராளம், அதனாலேயே அந்நியன் படத்தின் பாடல் வரிகள் “அந்தக்கடவுளை விடவும் பெரியவன் ஒருவன் பூமியிலுள்ளான் எவன்? பெண் கண்களைப்பார்த்துக்காதலை சொல்லும் தைரியமுள்ளவன் அவன்” அவ்வளவு யதார்தத்தைக்காட்டியது :) இவ்வகையான சந்தர்பத்திலேயே நண்பர்கள் தூதுவர்கள் ஆவார்கள். நானும் ஆனேன்

rudra mawatha அவளின்class முடிய மட்டும் wait பண்ணி அவளிடம் சொல்ல வேண்டும். நான் கொண்டுவரப்போகும் resultஐ எதிர்பார்த்து அவன் commercial bank அடியில் காத்திருந்தான், நான் நிற்கும் போது ஒரு seniorவந்து ”என்ன தம்பி இங்க” எண்டான் நான் ஒன்டும் சொல்லாமல் இருக்க “ஆ ஆ விளங்குது ” என்று என்னை பார்த்து சிரித்துவிட்டுப்போனான். அவனும் இப்படி அவன் துண்டுக்கு watchman வேலை பார்க்கவே போய்க்கொண்டிருப்பான், இருந்தும் ஒரு நக்கல் ஏதோ அவன் படிக்கப்போகிற மாதிரி. class முடியும் நேரம், நான் விறு விறு என pucக்குள் போய் அவள் class அடியில் நின்றேன் (roadல் இருந்து இந்த riskஆன வேலை பார்க்க முடியாது தெரிந்தவர்கள் வந்தால் அவமானம்)
class முடிந்து அவள் தோழிகளோடு வந்தாள்

“excuse me”.
"என்ன??"
“erm ....வந்து என்ட friend உங்களை love... ”
"யாரு friend??"
”-----”
“ஏன் இதை அவர் வந்து சொல்லமாட்டாரோ”
என்னிடம் அதற்கு விடையில்லை நான் அவள் முகத்தைப்பார்த்தேன்
“இல்லை அவன் கொஞ்சம் seriousஆ”
“hospitalல இருக்கிறாரா??”
அவள் என்னிடம் விளையாடுகிறாள் என நல்லாவே தெரிந்தது, நான் classல் சாந்த சொரூபி அதை விட அன்று அவ்ளுகளிடம் தனியாக மாட்டிக்கொண்டேன், card markபண்ணுற அக்காவையும் காணவில்லை அவா வந்தா தம்பி என்ன கதை கீழ போங்கோ எண்டு விரட்டி என்னைக்காப்பாற்றி இருப்பார்
அவள் சிரித்துக்கொண்டே ”எனக்காக என்ன செய்வார்???”
“என்ன செய்ய வேணும்?”
“இங்க இருந்து கீழ குதிப்பாரா??”

அலைபாயுதே வந்த feverல் எல்லா நாயும் தன்னை shalini ஆக நினத்துக்கொண்டு பயலுகளை குதிக்கவைப்பதிலேயே குறியாக இருந்தாளுகள். அதுவும் நான் நின்றுகொண்டிருந்தது 2வது மாடி!!!!!!!! அங்கிருந்து குதித்த பிறகு love இருந்தென்ன போய் என்ன???

”கேட்டுப்பார்த்துசொல்லுறன்”
”ஒண்டும் வேணாம் இனிமேல் இப்படி வந்து நிக்காதயுங்கோ” என எனக்கு படிக்கும் காலத்தில் படிப்பதன் மகத்துவம் பற்றி சொன்னாள், கலிகாலம் என் அம்மா கூட எனக்கு advice பண்ணுறதில்லை. எல்லாம் முடிந்து அவனிடம் சென்றேன்
”உது சரிவராது மச்சான் ஏலாதாம்”
“உன்னட்ட ஒரு வேலை சொன்னாள் இப்படித்தான் ஒழுங்கா ஒரு love சொல்ல முடியேல்ல”
எதோ என்னால்தான் rejectஆன மாதிரி build up விட்டான்
நான் அவனை முறைத்தேன் “சரி விடு கோவப்படாத” என்று சொல்லி அடுத்த கிழமையே என்னை மீண்டும் தூது போக சொன்னான். இம்முறை அவன் கவிதையும் எழுதி இருந்தான் நான் பிரித்து வாசித்தேன்
“அன்பே நீ ஒரு பூ
உன் நிறமோ பருப்பூ“
முதலிரண்டு வரிகள் வாசித்தவுடன் எனக்கு அவனை நினைத்து அழுவதா என்னை நினைத்து அழுவதா என்றே தெரியவில்லை!!!!$#@$@#$

Sunday, March 22, 2009

மீண்டும் உங்களை

assingmnt அது இதுவென note எழுத முடியாமல் போய்விட்டது, ஆர்த்திகா அஹல்யா என பள்ளிக்காலங்களின் posh துண்டெல்லாம் (sleeveless அணிவது local olல் மிதமிஞ்சிய கவர்ச்சி ), என் friend listல் உள்ளதை இட்டு மகிழ்ச்சி, ஆனந்தன் sir classக்கு விடிய காலமை எழும்பி போனால் எல்லாம் இழுத்திப்போர்த்திக்கொண்டு வந்து கடுப்பேற்றுவாளுகள். அப்படி எங்களை கடுப்பேற்றும் uniform வைக்காததையிட்டி LC க்கு மனங்கனிந்த பாராட்டுக்கள், இருந்தாலும் busல் போற LC பெட்டையளுக்கு deodrant பற்றிய விழிப்புணர்வு அவசியம், ஏனெனில் அந்த நரக வேதனை அனுபவித்தவனுக்கே தெரியும். சரி இனி என் நண்பன் பிரிந்தனுக்கும் எனக்குமான நட்பை பற்றி

yr8 s class, பெண்கள் மேல் ஒரு ஈர்ப்பு வந்த ஒரு காலகட்டம். நானும் விழும் வலை தெரியாமல் classக்குப்போனேன். அங்கே கிருஷ்ணமூர்த்தி பஞ்சபூதமாகி எல்லோரையும் ஒரு கை பார்க்கும், அவா அடிக்கு பயந்தே நான் நடு rowல் இருப்பேன். அந்த classல் இருந்த தத்து பித்து துண்டுகளுக்கு நடுவே ஒரு extra ordinary துண்டாய் சி-- தா-- திகழ்ந்தாள். சரி line போடலாம் என நினைக்கும் போது , பக்கத்தில் இருந்தவன் சொன்னான் machan அது எண்ட துண்டு yr7ல இருந்து tryபண்ணுறன் எண்டு, அவன் வேறு யாருமல்ல நம் உற்ற நண்பன் பி-ந்-ன் தான், சரி இவன் என்னவிட personalityயாக இருக்கிறான் என நினைத்தபோதுதான் அவள் அவனின் பக்கத்த்து வீடு என்று சொன்னான் geographically அவனுக்கு advantage இருந்ததால் நான் widraw பண்ணிக்கொண்டு, மச்சான் help வேண்டுமென்றால் சொல் என்றேன். அப்படி தொடங்கியதே எமது புனிதமான நட்பு, அவன் அந்த துண்டை பிறகு மாட்டியதும் 2007 மட்டும் அந்த துண்டு இருந்ததும் ஒரு சாதனை, எனக்கு தெரிந்து அவ்வளவு காலம் ஒரே துண்டை வைத்திருந்தவன் கிடையாது, எனவே அவனை நினைத்து பெருமை அடைகிறேன். அவனும் நான் அவனுக்கு yr 7 ,8ல் கொடுத்த துண்டு மாட்டுவதற்கான எனது ஆலோசனைகளை மறந்திருக்க மாட்டான் என எண்ணுகிறேன்.:)

yr 9ல் எமக்கு முகப்பருக்கள் வந்த போது நாம் personality பற்றி கவலைப்பட்ட காலத்தில் என் class மாணவ்ர்கள் பாவித்த beauty tipsஐ இங்கு பகிரலாம் என்று இருக்கிறேன். கருணாநிதி sir ஏதோ acid பாவிச்சால் pimples போகும் என கூற அதை அளவுக்கதிகம் பாவித்து முகத்தை சுட்டுக்கொண்டவர்கள் ஏராளம், நான் எந்த பாதிப்புமின்றி இருப்பதைக்கண்டு andrewதான் நீ மஞ்சள் பூசுகிறாய் தானே என்றான், நான் இல்லை சந்தனம் என என் ரகசியத்தை போட்டு உடைத்தேன், அன்று என் நண்பர்கள் பலர் நான் இதை அவர்களுக்கு சொல்லவில்லை என கோபித்துக்கொண்டனர், பின்னர் அவர்கள் வீட்டிலும் சந்தனகாண்டம் அரங்கேறியது. ஒருவன் butterscotch apply பண்ணினான், ஒருமுறை நான் அவன் வீடு தேடி போனபோது பக்கத்துவீட்டுப்பிள்ளை அந்த பச்சைக்கலர் அண்ணாதானே என்று கேட்குமளவிற்கு butterscotchடன் வலம் வந்தான், என் சந்தன் ideaவையே modify பண்ணி கஷ்டப்பட்டு அதில் rose,ம்ற்றும் இதர பொருட்களை அரைத்துப்போட்டு துரிதகதியில் அழகாக முற்பட்டவர்கள் நிலை அந்தோ பரிதாபம். வெள்ளவத்தையில் விற்கும் சந்தனம் கலப்படம் அதனால் முகம் எரிகிறது என ம்யூரா கோவிலடி மட்டும் நடந்து போய் தூய சந்தனம் வாங்க வைக்குமளவிற்கு சந்தன fever தொற்றிக்கொண்டது, clear white என்று ஒரு soap இருக்கு போட்ட உடனே வெள்ளை ஆகலாம் என ஒரு பரதேசியின் சொல் கேட்டு அதை பாவித்ததில் என் நெற்றியின் இரு மூலையிலும் dead skin!!!! அவனை ஏசப்போனால் அவன் முகம் முழுவதுமே ரணகளமாயிருந்தது, ஒரு உச்சுக்கொட்டிவிட்டு நாம் மீண்டும் சந்தனத்திற்கே கட்சி மாறினோம். பிறகு ஒரு fairness creamஐ random ஆக பாவிக்கத்தொடங்கி results அமோகமாக வர நண்பர்கள் அனைவரும் classroomல் புடைசூழ நின்று “சொல்லடா”, என மிரட்டியபோது என் ரகசியத்தை வெளியே விடாமல் ச்ந்தனம் மஞ்சள் கலந்து என வாயில் வந்ததை எடுத்து விட்டேன், அவர்களும் நம்ப ரகசியம் காப்பாற்றப்பட்டது. பின்னர் தான் nomarks soap சந்தைக்கு வந்தது. அதன் results நன்றாக இருந்தது. (அது வருமுன் காக்கும் வந்ததை போக்குவது கஷ்டம்). வெள்ளவத்தை pharmacyல் விற்கும் அதை எனக்குத்தெரிந்து எங்கள் class girlsஐ விட boysதான் அதிகம் purchase பண்ணீனார்கள்(AL வகுப்புகளில் ஆண்களீன் முகப்பருக்கள் பெண்களை விட குறைந்திருந்ததை நீங்கள் அவதானித்திருப்பீர்கள்). நாளுக்கு 2 முறை கரட் juice தவறாமல் அனைவரும் பருகினோம்(carrot பிடிக்காதவர்கள் மற்ற பழ வகை சாறுகளை விழுங்கினர்). முகப்பரு வராமல் இருக்க OLல் chocalate item சாப்பிடுவதை நிறுத்தும் வழக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதை இன்னும் யார் யார் பின்பற்றுகிறார்களோ தெரியவில்லை ஆனால் நான் பின்பற்றுகிறேன். இதை விட extremeஆகி மாதாமாதம் facial செய்பவனையும் எனக்கு தெரியும். nomarks ன் புதிய கண்டுபிடிப்பான one day pimple cure வந்தவுடன் பெண்களை விட எங்கள் classல் ஆண்களே அதை வரப்பிரசாதமாக க்ருதினர், ஆனால் என்ன அது ஒரே நாளில் pimplesஐ போக்கி dead skinஐ கொண்டு வரும், ஆகவே சந்தனமே மிகச்சிறந்த வரப்பிரசாதமாக மீண்டும் அதன் ஸ்தானத்தை பிடித்துக்கொண்டது. இன்னும் பல சிறு சிறு beauty secretsஐ classல் ஒவ்வொருவனும் வைத்திருந்தான், ஒருமுறை நான் ஒருவன் வீட்டிற்கு போனபோது அவன் பாலாடையால் மூடிய முகத்தைக்கண்டு பயந்து விட்டேன் , classல் வேறு யாருக்கும் இந்த beauty tips leak ஆக்கப்படாது என சத்தியம் வாங்கினான். முகம் செழிப்பாக வர ஒவ்வொரு நாளும் காலை தயிருடன் தேனைக்கலந்து சாப்பிடும் வழக்கமும் புழக்கத்திலிருந்தது, என் தங்கை அதை ஒருநாள் சாப்பிட்டு இந்த இழவை எப்படி சாப்பிடுகிறாய் என கேட்டாள். அதை தொடர்ந்து சாப்பிட்டு சளீ பிடித்ததால் அதை ஒன்று விட்டு ஒருநாள் சாப்பிட்டு பொதுநலம் கருதி அதை நண்பர்களுக்கும் சொன்னேன் :)

class ஆண்களே அழகு விஷயத்தில் இவ்வளவு கஷ்டப்பட்டு ஆராய்ச்சி செய்து செயற்பட்டபோது பெண்கள் எவ்வளவு செய்திருப்பார்கள் நினைக்கவே கண்ணைக்கட்டுகிறது!!!!!

By
JEEVA

Wednesday, March 18, 2009

இனிமையான பள்ளி நாட்கள் பாகம் 2

இப்படி எல்லாமா ஆசிரியருடன் நடந்து கொள்வார்கள்

11 ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சை நெருங்கி கொண்டிருந்த காலம். இருந்தாலும் எமது மாணவர்களின் குறும்புக்கு ஒரு அளவே இல்லாமல் சென்றுகொண்டிருந்தது. எமக்கு தமிழ் படிப்பித்த ஆசிரியர் செல்வி சுந்தரி கதிர்காமதம்பி. குள்ள உருவம். சுருட்டை முடி. ஒரு நைலெக்ஸ் சாரீ கையில் handbag உடன் என்னுமொரு பையும் வைத்திருப்பார். 35 வயது மதிக்கத்தக்க உருவம் என்றாலும் வீரகேசரி பத்திரிகையில் மணமகன் தேவை விளம்பரத்துக்கு கீழ் இவரது விளம்பரமும் பிரசுரிக்க தவறியது இல்லை. இது பல மாணவர்களுக்கு தெரியாத உண்மை. இவரை பாடசாலயில் சந்திக்கவேண்டும் என்றால் இடைவேலைக்கு 15 நிமிடங்களுக்கு முன்னால் சிற்றுண்டி சாலையில் காணலாம். கதிர கதிரா என்று இவரை செல்லமாக மாணவர் குளாம் அழைக்கும்.


நாளுக்கு நாள் ஆசிரியரது கொடுமை தாங்கவில்லை.அன்றும் வழமை போல ப்ராஜெக்ட்க்கு மேல் ப்ராஜெக்ட்ஆக தந்துகொண்டிருந்தாள் எமது ஆசிரியை கதிர்காமத்தம்பி. ஆசிரியருக்கு மிகவும் மரியாதையாக எங்களுக்கு நீங்கள் படிப்பிக்க வேண்டாம் என்று மறைமுகமாக பலவழிகளில் கூறிப்பார்தோம். அவரும் கேட்பதாக தெரியவில்லை. உடனே மாணவர் அணி செயலில் இறங்கியது. எதுக்கும் வழமை போல் ஆபித் முன்நின்றான். என்னதான் கொக்கி வெறித்தனமாக சிலவேலைகளில் எடுப்பட்டலும் ஆசிரியருக்கு அருகில் சற்று மரியாதை போல காட்டி கொள்வான். இங்க தான் நிற்கிறான் ஆபித். இருந்தாலும் தற்கொலை குண்டுதாரி போல் சிலவேளைகளில் மாட்டிவிடுவான்.


ஆபித்தின் கோபத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. உடனே சென்று கதிரா வின் சாரிக்கு ஒரு கரைக்கு நெருப்பு வைத்து விட்டான். ஆனாலும் நல்லவன். உடனேயே அதை அணைத்தும் விட்டான். பின் மனம் கேக்கவில்லை போலும் மீண்டும் சென்று அவருடைய 10 தலைமயிரை எண்ணி கத்திரிக்கோலால் வெட்டிவிட்டான். ஆனாலும் அவன் ஆசிரியருக்கு நன்மை தான் செய்திருந்தான். அவன் வெட்டியது அனைத்துமே நரை முடிகள்.

பின்பு மற்றொரு நாள் தற்செயலாக ஆசிரியர் கொண்டுவரும் மற்றபையை எமது வகுப்பு உளவுத்துறை சோதனை இட்டபொழுது அதிலிருந்து 2 சோடா போத்தல்களை ஆசிரியர் கடத்தி வீட்டுக்கு கொண்டு செல்வது புலனானது. உடனே எமது புலனாய்வு துறை அந்த 2 போத்தல்களையும் பத்திரமாக மீட்டெடுத்தது. அவருக்கு தண்ட பணமாக ஆசிரியரது handbagஇல் இருந்து 40 ரூபாயையும் அவருக்கு தெரியாமல் எடுத்துவிட்டது. அந்தபணத்தில் அன்று மாங்காய் வாங்கி உண்டதும் இந்த அடியேன் இன்னமும் மறக்கவில்லை.

ஆனாலும் எமது நியாயமான போராட்டத்தை ஆசிரியர் கேட்பதாக இல்லை. வீம்பு பிடித்து கொண்டு நின்றார். தனிநபர் போராட்டமாக இருந்தது. மாணவர் போராட்டமாக எழுச்சி பெற்றது. எல்லோரும் கூடி ஆராய்ந்து பின் ஒரு முடிவை எட்டிநோம்.. அது ஆசிரியர் வகுப்புபை விட்டு செல்லும் போது கைதட்டுவது என்று... தினம் தினம் அவரது பாடவேளை முடிந்து அவர்செல்லும் போது நாமும் கைதடடுவோம். அவரும் விடுவதாக இல்லை. மறுநாள் பாடத்துக்கு வந்துவிடுவர். எமக்கும் அவர் மீண்டும் வருவது விரக்தியை ஏற்படுத்தியது. மீண்டும் பலமாக கைதட்டுவோம். அவரும் மறுநாள் வந்துவிடுவார். இப்பொழுது நாம் புதுவித முயற்சில் ஈடுபட்டோம். அவர் செல்லும் போது இறுக்கி கத்துவது என்று...... நாளுக்கு நாள் எமது முயற்ச்சி எறும்பு ஊற கல் தேய்ந்து போல பலன் அளித்தது. இறுதியில் பக்கத்து வகுப்பு மாணவர் துணை கொண்டு எமது போராட்டத்தில் வெற்றி கோண்டோம். ஆனல் இறுதியில் மிளகு கொடுத்து மிளகாய் வாங்கிய கதையாய் போனது. அதனை வரும் வாரங்களில் எழுதுகிறேன். இப்பொழுதும் ஆசிரியரது மணமகன் தேவை விளம்பரம் பத்திரிகையில் வருவதாக ஒரு கேள்வி.......

Tuesday, March 17, 2009

சீ....கதை

நாளை முதல் நான் படிக்க முடிவெடுத்திருப்பதால் இன்றே என் தோழி ஒருவர் சம்பந்தமான கதையை எழுதுகிறேன். இக்கதைகள் யாவும் யார் மனதையும் புண்படுத்துபவை அல்ல மாறாக ஒரு நல்ல மலரும் நினைவாகவே இவற்றை நோக்க வேண்டும். மற்றும் யாருக்காவது எங்கள் schoolல் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தால் தெரியப்படுத்தவும், முட்டைக்கதை அவ்வாறு எழுதப்பட்ட ஒன்றே ceylon simran பற்றியும் printhanஉடன் yr8 பற்றியும் கதைகள் pendingல் உள்ளன, royal college தவிர்ந்த நம் நண்பர்கள் பற்றிய கதைகளும் வரவேற்கப்படுகிறன (உதாரணம்: நம் தோழி ஆர்த்தி பற்றி கதைகள் இருப்பின் எழுதலாம் அவர் அதைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளமாட்டார் ஹி ஹி ஹி), சில அன்பர்கள் நான் LCதுண்டுக்கு line போட்டு எனக்கு ஏழரை பிடித்த கதையை எழுதச்சொல்லிக்கேட்கிறார்கள், எனக்கு தொடர் கதை எழுத நேரமில்லை, ஆனால் சந்தர்ப்பம் வாய்த்தால் எழுதுவேன்.

அ--யா fever ஓய்ந்து விட்ட காலம் , அவளுக்காக என் மேசை உடைத்த மன்மதன் LC v---ya விடம் மனதைப்பறிகொடுத்திருந்த காலகட்டம், அவளைப்பற்றி சத்தியமாக எனக்கு அப்போது ஒன்றும் தெரியாது, ஆனால் அவனே என் ஆருயிர் நண்பனிடம் அவளைக்காதலிப்பதாக சொல்லியிருந்தான், என் நண்பனோ, வேணாம் அது wrong number அவள் அப்பன் govrnmntல் பெரிய அண்ணாச்சி, விளைவு விபரீதம் ஆகும் என்று சொன்ன பின்னும் கேட்காமல் அவன் line போட்டான், கடைசியில் அவள் முடியாது என்றாள், அவள் தோழி மூலம் இவன் approach பண்ணியதாக இவன் கூறிக்கொண்டாலும் அங்கே அவள் தோழி அவளிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் இது சரிவராது என சொன்னதாக நம்பகமான தகவல்கள் கூறுகிறன.
anyway இச்சம்பவத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட எம் நாயகன் கதையின் நாயகியின் எதிர் வீட்டில் இருந்த எம் நண்பரின் வீட்டிற்கு வருகை தந்தான், எம்முடன் கதைத்துக்கொண்டிருந்த அவன் திடீரென மாயமானான், பார்த்தால் வீட்டு மொட்டை மாடியில் நாயகியின் வீட்டின் பக்கம் நோக்கிக்கொண்டிருந்தான்,feelings ஆக்கும் என நினைத்தோம், பிறகுதான் தெரிந்தது, நாயகி தனக்கு கிடைக்காத வெறுப்பில் இவன் இந்த மொட்டைமாடியில் இருந்து அவள் வீட்டு மொட்டை மாடியை நோக்கி உச்சா போய்க்கொண்டிருந்தான் என்பது, காதல் தோல்வியை இவன் எதிர்கொண்ட விதம் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, இப்போது நினைத்தால் சிரிப்பாக வருகிறது :)

ஆட்டோகிராப்

அப்ப OLevel timeல ஆட்டோகிராப் என்பது சாதாரண விசயம் இல்ல. யார்ட கூட பெண்களின் ஆட்டொகிராப் உள்ளது என்பது போட்டி மட்டும் அல்ல ஒரு Social Status கூட. சில நேரம் எங்களிடம் உள்ள பெணகளின் ஆட்டொகிராப் info பார்க்க அவர்களது காதலர்களாக தம்பட்டம் அடிப்பவர்கள் எம்மை "மச்சான் மச்சான்" என்று கவனித்ததும் உண்டு. (மன்னிக்க வேண்டும் Srilankan Privacy Law பற்றி எல்லாம் அப்ப நாங்கள் அறியவில்லை) சில நேரம் அவர்களின் ஆசை நாயகிகள் கையெழுத்திட்ட பக்கதில் தான் தாங்களும் கையெழுத்து இட வேணும் என்று லொள்ளு பண்ணுவார்கள் இப்படி சில பெண்களும் தங்கள் ஆசை நாயகர்கள் பக்கதில் தான் தாங்களும் கையெழுத்திட வேண்டுமென லொள்ளு பண்ணிய வரலாறுகளும் உண்டு.

Social Networking எல்லாம் போன்லயும் தாபாலயும் என நம்பி இருந்த காலம். அப்போது தான் hotmail என்ற ஒரு mail இருப்பது பற்றி தெரிய வந்தது. ஆசைக்கு ஆறேழு email முகவரி திறந்த காலம். சும்மா சும்மா email வரவெண்டும் என கண்ட கண்ட website இல் ரெஜிஸ்டர் பண்ணிண காலம் அதன் விளைவு இப்ப spam mail ஆக தெரியுது.

நான் வெளிநாடு செல்லமுதல் வகுப்பில் இருக்கும் பெண்களின் விவரங்களை பெற வேண்டும் என்ற ஒரு அவா இல்லை வெறி என்றே சொல்லலாம். ஆனால் இத்தனைக்கும் ஒரு வார்த்தை கூட உறுபடியா பேசினது இல்ல நல்லா வகுப்பில நித்திரை கொள்வேன். அப்பொழுது msn மற்றும் facebook இல்லை. சேரன் படத்தில் சொன்னது போல் வெறும் ஆட்டொகிராப் மட்டும் தான்.

இந்த ஆசையை என் நண்பர்களிடம் சொன்னேன் எல்லாரிடமும் கதைத்து brain storm பண்ணி ஐடியா எல்லாம் எடுத்து பிளான் பண்ணிணோம். ஒரு மாதிரியா கதைச்சு விநோத் வீட்டை இருந்து டிஜிட்டல் கமரா எல்லாம் கொண்டு வர வைச்சேன். பிறகு நான் நிறைய நாளா சேமித்த் காசுல சரியா வகுப்பில எத்தின பேர் இருக்கிறாங்களோ அவயளக்கு அளவா சொக்லேட் எல்லாம் வேண்டி ஆட்டொகிராப் book வேண்டி gold ஜெல் பேனா எல்லாம் வேண்டி வகுப்பிற்கு போனேன். இப்படி நான் வெளிநாடு போறேன் ஆட்டோகிராப் எடுக்கனும் வகுப்பு நேரத்தில கொஞ்ச நேரம் ஒதுக்கி தாங்கோ என்டு நேரா வகுப்பிற்கு போனதும் குகாவிடம் விசத்தை சொன்னேன். குகாவும் ஒருக்கா மேலேயும் கீழேயும் பார்த்து ஒரு நக்கல் சிரிப்பொன்றை உதிர்ந்தார். வகுப்பில நித்திர கொள்ர இவனெல்லாம் வெளிநாடு போனா.... என்று நினைத்தாரோ தெரியவில்லை. சரி வகுப்பை உடனே முடித்து குகாவின் துணையால் வந்த வேலை வெற்றிகரமாக முடித்தாயிற்று.

பிறகு பக்கத்தில் இருக்கும் அக்மி ஸ்டுடியொவில் உடனே படம் பிரதி பண்ணி ஆட்டோகிராப் புத்தகதுடன் சேர்த்து bagஇல் அடுக்கி வைத்தேன். (பிற்கு ஸ்டுடியோ எரிந்த கதை எல்லாம் உங்ககளுக்கு தெரியும் தானே!) ஒரு கிழமையா சரியான சந்தோசம் ஒரு உளப்புழகாங்கிதம்.( I guess அவ்வளவு நாளும் கதைக்காத பெண்கள் எல்லாரும் சேர்ந்து good luck சொல்லி ஆட்டோகிராப் bookல எல்லாம் எழுதின போது கிடைத்த excitement இப்ப வந்து எழுதிற facebook wall messageல கூட இல்ல.)

அவ்வாறு நான் ஆட்டோகிராப் எடுக்க வேணும் என்பதில் இருந்த வெறித்தனத்தில் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும். அடுத்த கிழமை வகுப்பிற்கு செல்ல எல்லாரும் திரும்பி பார்ததனர் "நீ என்ன போய்டு வந்திட்டியா" என்று குகா கேட்க "இல்லை இன்னும் ஒரு கிழமை இருக்கு அது தான் ஏன் வீணா கிளாஸ் கட் பண்ணுவான் என்று" சொல்ல வகுப்பே சிரித்தது. (இத்தனைக்கும் நான் மூன்று மாசமா ஒழுங்கா school போனது இல்ல)

ஆனாலும் இன்னும் அந்த ஆட்டோகிராப் books இருக்கு அந்த பசுமையான நினைவுகள் சொல்ல

Monday, March 16, 2009

முட்டைக்கதை

faisall sir,social studiesக்கு வெள்ளவத்தையில் வெகு பிரபலம், அவர் classன் கடைசி நாள் பெண்களுக்கு முட்டை அடிப்பது ஒரு சம்பிரதாயம், நாங்கள் பின்னால் நாயாய் பேயாய் அலைந்தும் எங்கள் காதலை புரிந்துகொள்ளாத கன்னியர்களுக்கு அதிக முட்டையடி விழும், அநேகமாக பெணகளின் அண்ணன்களோ அப்பாக்களோ வருவது வழக்கம் , வராதவளுகளுக்கு கச்சேரி :).....

எங்கள் batchன் கடைசி நாளும் வந்தது, முட்டையும் மினுமினுப்பன்களும் சகிதம் பயல்களும் ready.... class முடிந்ததும் attack பண்ணத்தொடங்கினோம், அங்கேதான் ஒரு surprise guerilla statergyஐ பெண்கள் பாவித்தனர், நாங்கள் அடித்துக்கொண்டு போக பெண்கள் உள்நோக்கி பல angleகளிலிருந்து ஒரு முனை நோக்கி நகர்ந்தனர் , நாங்களும் உற்சாகத்தின் உச்சத்திலிருந்தோம் ஆனால் அவளுகள் உள்நோக்கி நகர்ந்ததில் முட்டை யார் மீதும் அவ்வளவாக படவில்லை நாங்கள் அவளுகள் முன்னால் குவிந்த நேரம் முட்டை தீர்ந்துவிட்டது, அநியாயம் முட்டை இன்னும் கொஞ்சம் இருந்திருந்தால் என நினைத்தபோது சரவெடி போல நாங்கள் இதுவரை பாவித்த முட்டைகளை விட 2மடங்கு முட்டைகள் குவிந்தது, எங்கள் மேல், ஆம் ஒரே இடத்தில் குவிந்திருந்த எங்கள் மீது துளியும் பிசகாமல் அடிப்பது பெரிய கஷ்டமில்லை, பொறுத்தது போதுமென்று நினைத்த பெண் இனம் எங்கள் batchலா பொங்கி எழ வேண்டும்????

அடி என்றால் சும்மா சொல்லக்கூடாது முட்டையும் தக்காளியும் சேர்ந்து விழுந்தது, முட்டை ஒருவிதமாக மணக்கவே அது அழுகிய முட்டைகள் என தெரிய வந்தது, ஆக முட்டை அழுக ஒரு கிழமையாவது எடுக்குமென்பதால், இவளுகள் இதை எங்களை விட் ந்ல்லா plan பண்ணி இருக்கிறாளுகள் என தெரிந்தது, LC அரக்கி இதை தலமை தாங்கி நடத்தினால் அவள் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி,அவள் வீசிய ஒரு முட்டை சரியாக vinod முகத்தை பதம் பார்த்தது, அவன்தான் அங்கு maximum damage ஆனவன், ஜனனி வேறு சிரித்துக்கொண்டே மற்றவர்களை encourage பண்ணி முட்டை எறிந்ததாக சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர், சரியென நாங்கள் பொங்கி எழ நினைக்கும் போது police வந்தது, அவனவன் அரக்க பறக்க ஓடி abith வீட்டுக்குள் தஞ்சம் புகுந்தோம்.

அடுத்த நாள் தினக்குரல் ஆசிரியர் தலையங்கத்தில் பிரபல பெண்கள் கல்லூரி மாணவிகள் பற்றியும் முட்டை பற்றியும் குறிப்பிட்டதுடன், ஒரு cartoon ம் வந்தது, எல்லோரும் முட்டை அடித்திருந்தாலும் அதை பத்திரிகை வரையில் கொண்டு சென்றவர்கள் நாங்களே

இதற்கு பதிலடி கொடுக்க எங்கள் பாடசாலை மாணவர்கள் முடிவெடுத்து ஒரு திட்டத்தை வடிவமைத்தனர், அதுதான் எல்லா LC பெட்டைகளுக்கும் முட்டை ink மற்றும் மினுமினுப்பான்களால் OL கடைசி நாளில் அபிழ்ஷேகம் செய்வது, அந்த திட்டம் தவிடு பொடியான கதையும், principal அழுகிய பச்சை முட்டையை வினோத்தை குடிக்க செய்த கதையும், எல்லோரும் royal college வட்டமாக கொண்டு சென்று LC பெட்டைகள் சந்தி சிரிச்ச கதையும், சஞ்சீவன் எழுதியதால் நான் எழுதவில்லை, மேலும் இக்கதை இடம் பெற்ற இடத்தில் நான் இருக்கவில்லை , பலரது வாக்கு மூலம் அடிப்படையிலேயே இக்கதை எழுதப்பட்டது,

Sunday, March 15, 2009

O/L Science EXAM

O/L Science EXAM

வணக்கம்
இது O/L Science exam அன்று நடந்தது....

இன்று நினைத்தால் சிரிப்பு வருகின்றது ஆனால் அன்று........
ஒரு குட்டி பிளாஷ்back

கொக்கி வலகம்பொல் எதாச்சும் அதிரடியாக செய்ய வேண்டும் என்ற நோக்கில் மண்ணெண்ணெய் bottle உடன் exam hall குள் நுழைந்தான் நான் மட்டும் தான் hall குள் இருந்தேன் எதோ ஆதங்கத்தில் குப்பை வாலியை எடுத்து மண்ணெண்ணெய்ஐ அதில் ஊற்றி கொளுத்தி விட்டான் எதோ கலவரத்தில் கொடும்பாவி எரிப்பது போலே குபு குபு என தீப்பற்றி கொண்டது நானோ பதற்றத்தில் வெளியே ஓடிவிட்டேன் கொஞ்ச நேரத்துல்ல போலீஸ் மாமாக்கள் வந்தினம் புலன் விசாரணை தொடங்கியது எதோ தீவிரவாத செயல் போல photo எல்லாம் எடுதானுவல் சரி என்று ஒரு மாதிரியா exam தொடங்கியது part 2 எழுத ஆரம்பித்தேன் போலீஸ் மாமா வந்து முன்னால் நின்றார் என்னையும் என்ட NIC ஐயும் 4,5 தடவை பார்த்தார் இது நீதானே என்றார் நானும் ஓம் ஓம் எண்டு மண்டைய ஆட்டினான்..... exam முடிஞ்சதும் வந்து meet பண்ண சொன்னார் சரி என்று paperla ஏதோ கிருகிவிட்டு போன்னேன் [But I got a B for Science].....
அங்கே எங்களது principal அன்புடன் உபசரித்தார் என்ன ஒரு அடி ...... அவருடன் கமகே sir இணைந்து சரமாரியாக எவலு முடியுமோ அவளவுக்கு உபசரித்தார்கள் சரி உண்மையை சொல்லுவிடுவோம் என்று நடந்ததை சொன்னேன் அதற்கும் அடி...... நம்ப மாட்டேன் என்று விட்டார்கள். அப்புறம் பிரணவன் ஷியந்த் பிரசன்னா பேசி எனக்கு ஜாமீன் வாங்கி கொடுத்தார்கள் அப்புறம் princi உன் நண்பர்களை பார் உனக்கு துணையாக இருந்ந்தார்கள் என்றெல்லாம் சொன்னார் என்னக்கு எல்லாம் குத்து மதிப்பாக விளங்கியது.........

அப்புறம் அம்மாவிடன் உங்கள் மகனை தவறாக அடித்துவிட்டேன் உண்மை குற்றவாளியை அப்புறம் தான் கண்டு பிடித்தோம் என்ன்று princi மன்னி கேட்டார் .....

இத விட செம காமெடி என்ன வென்றால் அன்று முட்டை ink, knife கொன்னந்தவநெல்லாம் மாட்டு பட்டு vinoth பழைய முட்டை குடித்ததும் மற்றவர்கள் skulla சுத்தி வலம் வந்ததும் ஒரு அற்புத காட்சி தான்

BIG MATCH FEVER - பிக் மேட்ச் பிவேர்



மார்ச் 12,13,14 இன்பமான நாட்கள் ROYAL THOMIAN மோதிக்கொள்ளும் நாள் வந்தது

முதலாம் நாள் றோயல் 313/9 வெறும் 8 hrs குள் அடித்துக் குவித்தனர் THORA 5 hrs குள் எல்லா wicket இழந்து வெறும் 99 ஓட்டம் மட்டுமே குவித்தனர் 2 ஆவது இன்னிங்க்ஸ்இல் 2 நாட்களாக தட்டி தட்டி தட்டி தட்டி தட்டி தட்டி உங்களுக்கு கேட்கும் போதே கடுபாகுதே அங்கிருந்த எமக்கு எப்படி இருந்திருக்கும் 411 அடித்தனர் அதற்குள் எதையோ சாதித்தது போன்று எண்ணம் வேறு அவர்களுக்கு 2 நாட்களாக பந்தை தட்டி தட்டி தட்டி தட்டி விளையாடினால் யார்தான் 411 அடிகமாட்டான் ??? அதற்குள் நிதானம் இழந்த நாம் போலீஸ் மாமாக்களுக்கு ஏசுவதும் சோடா போத்தலால் அடிபதுவுமாக நேரத்தை ஒட்டினோம் அது மட்டுமல்ல ROYAL prefects கு THORA கதிரையால் அடிப்பதுவும் viseversa வும் நடந்தது அப்புறம் ROYAL bat பண்ண கிளம்பியதும் THORA நத்தையை விட மெதுவாக அரக்கி அரக்கி பந்து போட்டனர் ஆனால் காலநிலை குலபியதால் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது..... முக்கிய விடயம் ரொம்பவும் நிதானம் இழந்த S.Sanjeevan படம் எடு படம் எடு என்று என்னை ஒரு வழி பணிவிட்டான் ..... படங்களை நீங்கள் எனது profile இல் பார்த்து இருப்பீர்கள்.

பார்போம் ஒரு நாள் போட்டியில் தட்டி தட்டி தட்டி தட்டி தட்டி அட முடியுமா என்று

BIG MATCH FEVER - பிக் மேட்ச் பிவேர்

மார்ச் 12,13,14 இன்பமான நாட்கள் ROYAL THOMIAN மோதிக்கொள்ளும் நாள் வந்தது

முதலாம் நாள் றோயல் 313/9 வெறும் 8 hrs குள் அடித்துக் குவித்தனர் THORA 5 hrs குள் எல்லா wicket இழந்து வெறும் 99 ஓட்டம் மட்டுமே குவித்தனர் 2 ஆவது இன்னிங்க்ஸ்இல் 2 நாட்களாக தட்டி தட்டி தட்டி தட்டி தட்டி தட்டி உங்களுக்கு கேட்கும் போதே கடுபாகுதே அங்கிருந்த எமக்கு எப்படி இருந்திருக்கும் 411 அடித்தனர் அதற்குள் எதையோ சாதித்தது போன்று எண்ணம் வேறு அவர்களுக்கு 2 நாட்களாக பந்தை தட்டி தட்டி தட்டி தட்டி விளையாடினால் யார்தான் 411 அடிகமாட்டான் ??? அதற்குள் நிதானம் இழந்த நாம் போலீஸ் மாமாக்களுக்கு ஏசுவதும் சோடா போத்தலால் அடிபதுவுமாக நேரத்தை ஒட்டினோம் அது மட்டுமல்ல ROYAL prefects கு THORA கதிரையால் அடிப்பதுவும் viseversa வும் நடந்தது அப்புறம் ROYAL bat பண்ண கிளம்பியதும் THORA நத்தையை விட மெதுவாக அரக்கி அரக்கி பந்து போட்டனர் ஆனால் காலநிலை குலபியதால் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது..... முக்கிய விடயம் ரொம்பவும் நிதானம் இழந்த S.Sanjeevan படம் எடு படம் எடு என்று என்னை ஒரு வழி பணிவிட்டான் ..... படங்களை நீங்கள் எனது profile இல் பார்த்து இருப்பீர்கள்.

பார்போம் ஒரு நாள் போட்டியில் தட்டி தட்டி தட்டி தட்டி தட்டி அட முடியுமா என்று

என் பாடசாலை நண்பர்கள்

ரத்னாகரன் சஞ்சீவன் - அமைதியான பையன் எப்பொழுதும் ஜீவகானோடுதன் சுத்துவான் இருவருன் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் போலே
இவர் பட்டப் பெயர் : பகபூ

ஜீவகன் : இவனை மட்டும் என் வாழ்கையில் மறக்க மாட்டேன் ஒரு தடவை நான் பாடசாலையில் தூசனத்தில் பாடல் பாடினேன் என்று அவன் அம்மாவிடம் சொல்லி அவன் அம்மா அதை ஆசிரியரிடம் சொல்லி எனக்கு செம்ம அடி வாங்கி கொடுத்தாயே சொங்கி

நிருஷன் : ஆண்டு 1 தொடக்கம் 5 வரை வகுப்பில் கக்கா போடுவான் எப்பொழுதும் மற்றவன் உணவு இவனுக்கும் உணவு

மகாராமணன் : இவன் ஒரு அறிவுக் கடல் , எத பற்றி கேட்டாலும் சொல்லுவான் அனால்
குல்லிக மாட்டான்

ருமேஷ் உன்னை மறக்க முடியுமா இண்டெர்வல் நேரத்தில் செஸ் [chess] விளையாட வருவாய் நீ தோற்கும் பட்சத்தில் chess காய்களை எடுத்து எறிந்து சண்டை போட்டுகொண்டு ஓடிவிடுவான் மாணம் கேட்டவன் மறு நாளும் வருவான் விளையாட

சியாமளன் - 9 மணியளவில் வகுப்புக்கு வருவான் கேட்டால் tennis practice என்பான் வகுப்பில் எவன் என்ன செய்தாலும் இவன் தூங்கி கொண்டிருப்பான் அண்ணனுக்கு தப்பாம தம்பி சஷி அவனும் tennis practice ரீல் ஒட்டியே காலம் தள்ளினான். அதுவும் கொப்பியில் எழுத ஆரம்பித்தால் மாங்காய் size இல் எழுத்து இருக்கும்


சிவசுதா - சிரித்த முகம் புண் முறுவல் பூத முகம் கனா, ஷன்முகரஜ் விடம் எவ்வளவு அடி உதை வாங்கினாலும் சிரித்து கொண்டே இருப்பான் . மகாராமணனை கொடுமை பண்ணியவன்னம் இருப்பான் ஆஸ்திரேலியா விலும் அதை தான் செய்வதாகக் கேள்வி

ரத்னாகரன் சஞ்சீவன் - அமைதியான பையன் எப்பொழுதும் ஜீவகானோடுதன் சுத்துவான் இருவருன் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் போலே
உன்னை பற்றி ஒரு விடயம் சொல்ல மறந்துவிட்டேன் நீ காதலர் தினம் அன்று கணா வின் கரங்களால் முத்த மழை வாங்கினாயே ஐயகோ அதை வர்ணிக்க என்னிடம் உவமானம் இல்லை ஹரிஷன் சற்று உதவட......

தமிழில் type பண்ணுவது ரொம்ப கடினமாக உள்ளது மிகுதி அடுத்த வாரம்

இனிமையான பள்ளி நாட்கள்

ஜீவா facebook இல் எழுதும் பொது எனக்கும் ஏதாவது எழுத வேண்டும் போல உள் உணர்வு ஏற்படும். என் இனிய நாட்களை மீண்டும் மீட்கிறேன். என் முதல் நாள் பள்ளி, பல கனவுகளுடன் புத்தக பையை துக்கி கொண்டு சென்றேன். வருட தொடக்க வாரம் பாடங்கள் எதுவும் நடப்பதில்லை.காலை எட்டு மணிக்கு பாடசாலை கீதத்தை பாடி முடித்துவிட்டால் மீண்டும்
மதியம் ஒரு மணிக்கு மீண்டும் படும் வரை அனைவரும் குறிக்கோள் விளையாட்டு. அப்பாவின் விருப்பில் வெறுப்புடன் வழமையாக பாடசாலை செல்லும் நான் வழமைக்கு மாறாக மிகவும் மகிழ்ச்சியுடன் பாடசாலைக்கு வீட்டில் இருந்து கிளம்புகிறேன். ஆனால் நான் அறிந்திருக்கவில்லை அன்று எனக்கு சனி விளையாட போகிறது என்பதை.....

அன்றும் பாடசாலை கீதத்தை பாடி முடித்த பிறகு எமது வழமையான பணிக்கு அனைவரும் திரும்புகிறோம். ஒருவன் பந்தை எடுத்தான். நான் மட்டையை எடுத்தேன்.
விறுவிறுப்பாக விளையாட்டு நடந்துகொண்டிருந்தது. தீடீர் எண்டு கொக்கி "கணா கணா" என்று கத்தி கொண்டு வகுப்பறைக்குள் ஓடிச்சென்றான். கண்முடி முழிப்பதற்குள் அனைவரும் அவர் அவர் ஆசனத்தில் இருந்தனர்.

அந்த மறுபக்கத்தில் அங்கே ஒரு கரிய உருவம். சுருட்டை முடி. தொப்பை வண்டி. இடுப்பில் கைகள் என என் அருகே அந்த உருவம். புதுமாணவன் நான் அங்கு அப்பாவியாக நின்று கொண்டிருந்தேன். புதுவருட பிறப்புக்கு பட்டாசு வெடிக்கும் போது கண்வெட்டாமல் வெடிக்கும் பட்டாசை பார்த்து ரசிப்பது போல என் நண்பர்கள் அனைவரும் என்னை கண்வெட்டாமல் பார்த்துகொண்டிருந்தனர். நானும் என் அருகே நிப்பவரின் அருமை தெரியாமல் அவரை பார்ர்த்துக்கொண்டு நின்றேன். ஒரு கணப்பொழுதில் எல்லாம் முடிந்திருந்தது. நான் அங்கு விறைத்து போய் நிண்டுகொன்டிருந்தேன். நான் அழவில்லை. அனால் கண்கள் கலங்கி இருந்தன என் நண்பர்களின் முகத்தில் தாம் எதிர்பார்த்த ஒன்றை கண்ட திருப்த்தி.

அந்த கணப்பொழுதில் நடந்தது என்ன ??

நான் : ஆய்போவன் ஸார்
கா : நாயே!! உனக்கு ஆய்போவன் கேக்குது எந்த கிளாஸ் நீ நாயே ?
நான் : (இருந்த வகுப்பறையை காட்டி) இந்த கிளாஸ் தன் ஸார்
அவரது குரலின் தோணி தான் என்னை அங்கு விறைக்க வைத்து.

கா : எங்க இஎருந்து நாயே.... இங்கு வந்தனி அந்த ஸ்கூல் லையே படிச்சிருக்கலாமே.... ஏன் நாயே நீ இங்க வந்தனி.......

அப்போது தான் அந்த எதிர்பாரத சம்பவம் நடந்தது. உண்மையில் எனக்கு அது புதுசு
என் நண்பர்கள் அனைவரும் எதிர்பாத்து. என் கன்னத்தில் அவரது 5 விரல்களும் இருந்தது. உண்மை புரிய எனக்கு சில விநாடிகள் எடுத்தது . அன்று எனக்கு பிள்ளயார் சுழி போட்டு தொடக்கி வைத்தார், நான் திருந்துவதற்கு அல்ல. அடி வாங்குவதற்கு.......

பின்பு என்னை காணும் பொழுதெல்லாம் அவருக்கு ஒரு சந்தோசம்... அடி வாங்குவதற்கு ஒருவன் கிடைத்த மாதிரி. றோயல் கல்லுரி வாழ்க்கையின் முதல் படி கணாவின் அடி.........................

பின்பு தான் அவர் எனக்கு வரலாறு படிப்பிக்க போகும் ஆசிரியர் எண்டு அறிந்து கொண்டேன். அவர் எங்ளுக்கு படிப்பித்தது நாம் செய்த தவம்..........

ஒன்றை மட்டும் உறுதியுடன் அறுதியும் அக கூறிகொள்ள விரும்புகிறேன். யாரவது அவரிடம் அடி வாங்காமல் றோயல் கல்லுரியில் படித்திருந்தால் அது வீண்

Saturday, March 14, 2009

மேலைநாட்டு பல்கலைக்கழக ( Uni..) ஃபிகர்களை வெற்றிகரமாக "CORRECT" பண்ணுவது எப்படி?

இந்த இனிய சந்தர்ப்பத்திலே சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினரான நான் என் வாழ்வில் கடந்த 5 வருடங்களில் மேலைநாட்டு ஃபிகர்கள் விடயத்தில் பெற்ற அநுபவங்கள், அதன் மூலமான பல வெற்றிகள், சில சறுக்கல்கள் ஆகியவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நிச்சயமாக இவை உங்கள் எதிர்கால "ஃபிகர்" வெற்றிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

எம் பெருமான் "முருகனை" வணங்கி ஆரம்பிக்கின்றேன். ஆவரே இதில் வல்லவரும் ஆவார்.


1) பொதுவாக மேலைநாட்டுப் பெண்கள் அப்பாவித்தனமான சுபாவமும் எதயும் இலகுவில் நம்பும் தன்மையும் கொண்டவர்கள். மேலும் அவர்களின் பெயர்கள் "Stephnie, Ashee, Jane, Laura" என்றவாறாகவே அமையும். பதிலாக "ஜனனி, துவாரகா, தீபிகா" என்று அமைவதில்லை. இது உங்களில் பலருக்கும் ஏற்கன்வே அறிந்த விடயம் தான்.


2) "CORRECT" பண்ணுவதற்கு மிகவும் ஏற்புடைய காலம் முதலாம் ஆண்டு அகும். குறிப்பாக அதிலும் முதலாம்"SEMESTER" முன்னைய கிழமைகள் ஆகும்.


3) மேலும் "LABS, TUTES" என்பதைவிட "LECTURES"அதிக வாய்ப்புடைய சூழ்ல் ஆகும். குறிப்பாக முதல் வாரங்கள்....


4) மேற் குறிப்பிட்டவாறு நீங்கள் கண்டிப்பாக முதல் வாரம் "UNIVERSITY"க்கு சமூகம் அளிக்கவேண்டும்.


5) முதல் நாள் "LECTURE"இல் குறிப்பிட்ட நேரத்திற்கு 10 நிமடங்கள் முன்பதாகவே "LECTURE HALL" இனை அடைந்துவிடுங்கள்.
அப்போது வாசலில் பல ஃபிகர்கள் உள்ளெ செல்வதற்காக கத்திருப்பார்கள். சொற்ப அளவு கீழத்தேய பெண்களும் காணப்படுவர். அவர்களை கண்டுகொள்ளாதீர்கள்.


6) முதல் வாரம் என்பதால் 95% ஆன ஃபிகர்கள் தனியாகவே காண்ப்படுவர். அதில் உங்களுக்கு பிடித்தமான் ஃபிகரை தெரிவு செய்து ஒன்றும் அறியாதவர் போல் உங்களுடைய பாடமா "UNIT or SUBJECT (eg: BISINESS FUNDAMENTALS FIT1000)" நடைபெற இருக்கின்ருது என எதேர்ச்சையான மாதிரி வினாவுங்கள். மிக மிக மிக முக்கியம் உங்களுடைய ஆங்கில உச்சரிப்பு "UNIQUE ACCENT" 100% குறித்த நாட்டிற்கே உரித்தானதாக அமைய வேண்டும்.


7) அவ்வாறே முதலில் "COURSE" மற்றும் "UNIVERSITY" சம்பந்தமாக பேச்சைத் தொடருங்கள். அப்போது நீங்கள் உங்களை அப்பாவித்தனமாகவும், அதே நேரம் "SMART" ஆகவும் காட்டிக்கொள்ள வேண்டும்.


8) இப்போது "LECTURE" ஆரம்பிப்பதற்காக் எல்லோரும் உள்ளே செல்வார்கள். நீங்களும் பேச்சைத் தொடர்ந்தபடியே உள்ளே சென்று ஃப்கரின் பக்கத்தில் அமருங்கள்

.
9) இவ்வாரு செல்லும் போது ஒரு கட்டத்தில் உங்களுடைய "பெயர்" , "நகரம்" போன்றவற்றை அவர்களாகவே கேட்பார்கள். மிகமுக்கியம் உங்கள் பெயரை இலகுவான முறையில் கூறுங்கள். (eg: Vicknabalan as VICKY).
பதிலுக்கு அவர்களும் கூறுவர்கள்.


10) மேற்படி உங்களுடைய பேச்சுக்கள் அவர்களிடத்தில் ஒரு வகை நம்பதத்தன்மையுடன் கூடிய மரியாதையினை கொண்டுள்ளீர்கள் என்பதை எடுத்துக்காட்டுமாறு அமைய வேண்டும்.


11) பேச்சோடு பேச்சாக நீங்கள் அந்த நாட்டில் பிறந்தவர் , ஒரு " Perfomence Car eg: subaru wrx sti, nissan grt mazda rx8, audi r8, especially 6 Speed Manual transmission" வைத்துள்ளீர்கள். மற்றும் உங்கள் குடும்பத்தினரிடம் ஒரு "Franchise Business eg: Burger Kind" உண்டு என்பதையும் கூற மறந்துவிடாதீர்கள்.


12) முதல் வாரங்களில் அவர்கள் "BUS or TRAIN" இல் பயணம் செய்தால் அவர்களுடன் சேர்ந்து பயணங்களை மேற்கொள்ளுங்கள். உங்கள் வீடு வேரு திசையில் இருந்தாலும் பரவாயில்லை.


13) சிறிது கலத்தின் பின்னர் அவர்களுடைய வழியில் தான் நீங்கள் செல்வதாகவும் அவர்களுக்கு உங்கள் "Perfomence Car "இல் ஆசனம் தருவதாக் கூறுங்கள். அதனை நிச்சயம் மனமுவந்து ஏற்பார்கள்.


14) பின்னர் வழியில் "KFC , Mc, Pizza, Pasta போன்றவற்றை அவர்களுக்கு வாங்கி கொடுத்து நீங்களும் உண்ணுங்கள். முதலில் பணம் நீங்கள் செலுத்துங்கள்.பின்னர் அவர்களும் செலுத்துவர்கள். இங்கே இவர்கள் இலங்கைப் பெண்களிடம் இருந்து அதிகளவு வேறுபடுகின்றார்கள் பார்த்தீர்கள????!!!



15) .உங்களிடைய வாழ்வின் சுகதுக்கங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


16) இவற்றுடன் மேலும் இயற்கையாகவே உங்களிடத்தி நெருக்கம் அதிகரிக்கும். இதனைப் பயன் படுத்தி செய்ய வேண்டியவற்றையிம் செய்து கொள்ளுங்கள்.


17) இப்போது நீங்கள் "de facto" என்ற நிலையினை நிச்சயமாக அடைந்திருப்பீர்கள். மேலும் உங்களுக்கு இடையில் பல நிகழ்வுகளும் இடம்பெற்று இருக்கும்.


18) இவை அனைத்தும் நிகழும்போது உங்களுடைய இந்த "Semester" நிறைவடையும் நேரம் நெருங்கியிருக்கும்.


19) உங்கள் அடுத்த "Semester"றும் இந்த ஃப்கரோடு சேர்ந்து உங்கள் பிறவிப்பெருங்கலை நீந்துவதா?, அல்லது வேறு "ஃப்கரினை" "Correct" பண்ணுவதா என்பது உங்கள் கைகளிலே உள்ளது.


20) முக்கியமாக இவற்றினை வெற்றிகரமாக செயவதற்கு "அந்த நாட்டிற்கே உரித்தான ஆங்கில உச்சரிப்பு", "Sports cars , 6 Speed Manual transmission and twin turbo recommended" என்பன உங்கள் இரு கண்கள் போன்றவை....

LC துண்டு!!!

நான் சீலன் sir classக்கு அங்கொரு இங்கொரு நாளாக tuition போன காலகட்டம், இன்னும் 1st term தானே என்பதால் அம்மாவும் நான் class போகாததை க்ண்டு கொள்ளவில்லை!!! இப்படி நான் classக்கு போகாத நாளில் பார்த்துத்தான் அந்த LCதுண்டு எங்கள் classக்கு வந்திருக்க வேண்டும் , அடுத்த நாளே எங்கள் schoolக்கு செய்தி வந்துவிட்டது, அதுவரை LC துண்டுகளை tuition classல்பார்த்திராததாலும், LC துண்டுகள் பாலும் தேனும் பருகி மற்றைய துண்டுகளை விட செழிப்பாகவும் அழகாகவும் இருப்பார்கள் என நிரூஷன் சொன்ன தகவலாலும் 12 வயதான நமக்கு அந்த LC துண்டை பார்க்கும் ஆவல் மேலிட்டது, சரி சரி அடுத்த சனிக்கிழமை பார்த்துக்கொள்ளலாம் என நினைத்துக்கொண்டு அந்தக்கிழமையும் கடத்தினோம்......சனிக்கிழமையும் வந்தது.

10.30 classக்கு நான் 7மணிக்கே குளிக்கப்போய்விட்டேன், அம்மா இரண்டாம் முறையும் கதவு தட்டி ”போதும் வா சளி பிடிக்கப்போகுது” என சொன்ன பிறகே நான் குளித்து முடித்தேன், சரி என பரதேசி போல் போகாமல் கொஞ்சம் ஒழுங்காய் போனேன். அங்கு classக்கு போய் பார்த்தால் எல்லா பரதேசியும் ஒழுங்காக வந்திருந்தது....சரியடா என கறுவியபடியே முதல் batch முடிய மட்டும் காத்திருந்தேன். அப்போது அந்த LC துண்டும் வந்தது......

பெரிய நெற்றி, சுருள்ந்த கேசம், நிரூ சொன்னது போல நிதமும் பால் குடிப்பவள் நிறத்தில்தான் இருந்தாள்!!!! அதற்கு முன்னும் தமிழ் classல் இவளை ஒத்த நிறத்தில் ஒரு அழகான பெண் இருந்தாலும் , இவளைப்போல் அவளும் பால் தேன் குடிப்பாள் என நினைக்கத்தோன்றவில்லை!!!

classக்கு வந்தவுடனேயே அங்கிருந்த ஒரு மாணவியிடம்"R u guys waiting for the 10.30 class??" என சீலன் sir classல் முதல் முறையாக english பேசும் கலாச்சாரத்தை புகுத்திய பெருமை அவளையே சாரும்!!!!! முன்னால் இருந்த மாணவன் அவள் english எப்படி என்பது போல் என்னை ஒரு பார்வை பார்த்தான்....

classக்கு வந்ததிலிருந்து அவள் நிலத்தையும் கொப்பியையும் சீலனையும் தவிர வேறு எதையுமே பார்க்கவில்லை!!!ஒரே ஒருமுறை அவள் விழுந்த peniclஐ நான் எடுத்த போது , களவாணியோ போன்றதொரு பார்வை பார்த்தாள்....நான் pencilஐ திருப்பி அதே இடத்தில் வைத்துவிட்டேன்...ஒரு thankyou அவ்வளவுதான்... சரி என்று schoolக்கு தகவல் சொல்லப்போனால் அதற்க்குள்ளாகவே எங்கள் schoolல் அதே classக்கு வரும் இருவர் அந்த பெண்ணுக்கு line போட தொடங்கிவிட்டனர், அங்கு classroom இரண்டுபட்டது....அவள் என்னைப்பார்த்தால் என அவனும் என்னைப்பார்த்து சிரித்தாள் என இவனும் சண்டையைத்தொடங்கினர்!!!!

இந்த சண்டை இப்படி தொடர்ந்த போதுதான் நானும் சீலனிடம் போவதை ந்றுத்திக்கொண்டேன், அந்த மன்மதர்கள் இருவருக்கும் class roomக்குள் வாய்த்தர்க்கமாய் இருந்த சண்டை அவர்களில் ஒருவன் அவளிடம் “பென்சில் இருக்கா??” என வினவியதால் ”என் துண்டுடன் உனக்கு என்ன கதை” என்று கைகலப்பாக பரிணாமம் பெற்ற்து, வகுப்பின் சக மாணவர் தலையீட்டால் அந்த பிரச்சனை ஒத்தி வைக்கப்பட்டது.......

ஒரு முறை நான் schoolக்கு மட்டம் போட்டுவிட்டு அடுத்த நாள் schoolக்கு போனால் அங்கே என் table இரண்டாய் பிளந்திருந்தது!!!! அதற்கான காரணம் என்க்கு ஒரு படம் என தெரிந்தது....நான் வராததால் அவர்களில் ஒருவன் என் இடத்தில் இருந்ததாயும் அவன் அந்த பெண்ணின் படத்தை மேசையில் வரைந்ததாலும் சண்டை வலுத்து இறுதியாக என் மேசை உடைந்தது தெரிய வந்தது :(

நான் அவன் வரைந்த படத்தை கூர்ந்து கவனித்தேன்!!! sleeveless uniform அணிந்த ஒரு பெண்ணைக்கீறி “அ---யா” என எழுதி இருந்தான் ,,,,,, அவன் வரைந்த படம் அ--யா போல் அல்லாமல் யாரோ ஒரு அகோரி போல இருந்ததாலும் இந்த வரைதலுக்காய் என் மேசையை பலி கொடுத்தது நியாயமா என ஒரு கேள்வி உதித்தது. :)

anyway அதன்பின் கணா sir வந்து முன் பின் விசாரிக்காமல் என் பிடரியில் ஒரு இடி இடித்தார்!!! அது அவருக்கு மிகவும் பிடித்த விளையாட்டு!!! என் நல்ல வேளை பாலராஜன் எழும்பி....”sir அவன் நேற்று வரவில்லை” என சொல்லி என்னைக்காப்பாற்றினான்... அதன் பின் line போட்ட இருவரும் அவர்களின் சண்டையைப்படிப்படியாக குறைத்துக்கொண்டனர்.... அவள் இருவருக்கும் கிடைக்கும் சாத்தியக்கூறுகள் தென்படவில்லை போலும்...

பல வருடங்களின் பின் நான் அதே துண்டை மணியம் sir physics classல் பார்த்தேன்....இன்னொரு LC பெண்ணுடன் வந்திருந்தாள்.....என்னை அடையாளம் கண்டு கொண்டவள் போல ஒரு புன்சிரிப்பை உதிர்த்த போது என் பிடரி ஏனோ வலித்தது :)

அழைப்பிதழ் :)

"we rockd those days ddnt we"......."we were a bunch of nuts"........"awww we were the best click men" இவை யாவும் நான் என் batch girlsன் group picturesன் கீழ் கண்ட comments, அவை அநேகமாக பள்ளிநாட்களின் புகைப்படமாகவோ அல்லது சமீபத்தைய get to gether புகைப்படங்களாகவோ இருக்கக்கூடும். இதைப்பார்க்கும் தம்பிமார் “இந்த அக்காக்கள் எவ்வளவு நல்லம் எங்கள் batchல் வந்திருக்கிறாளுகளே ”என்றும் 05 batch அண்ணாமார் lucky என்றும் நினைக்ககூடும் எனதருமை தம்பிமாரே உங்கள் batchக்கு சற்றும் சளைத்தவர்களல்ல எங்கள் batch பெண்கள், அவர்களும் நிலத்தையும் sirஐயும் கொப்பிஐயும் மட்டுமே பார்க்கும் வித்தையை அறிந்தவர்கள்...உங்கள் batch பெண்களும் இவர்களைப்போலவே இன்னும் சில ஆண்டுகளில் photo comments போடுவது நிதர்சனம்...நம்புங்கள் என் profileல் உள்ள பல பெண்கள் வருடக்கணக்காக என்னுடன் படித்திருந்தாலும் அவர்களின் குரல் வளத்தை அறியாதவன் நான்!!! எங்கள் batch LC மாணவிகள் சமீபத்தில் நடந்த தோழியின் திருமண வீட்டில் ஆடிய குத்தாட்டப்புகைப்படங்களைப்பார்த்ததன் பின் மீண்டும் நான் வழமைபோல் சாப்பிடுவதற்கு மூன்று நாட்கள் பிடித்தன.....மிதமிஞ்சிய அதிர்ச்சியின் விளைவது, ஆகவே எதோ பாரதி கண்ட புதுமைப்பெண்கள் வாழ்ந்த batch என நினைத்து இனிமேல் என்னுடன் யாரும் chat பண்ண வேண்டாம், மனம் புண்ணாகிறது....

அதற்காக எல்லாப்பெண்களும் அப்படி இருந்துவிடவில்லை , சகஜமாக சிரித்துப்பேசும் பெண்களும் பத்ரகாளிகளும் ஒருங்கே இணைந்திருந்தார்கள், ஒரு பெண்ணிடம் love letterநீட்டி அவள் அவனை கெட்ட வார்த்தையால் திட்டியது இங்கு பலருக்கு நினைவிருக்கலாம் ஆனால் அவள் என்னுடன் science class வந்தாள் எப்போதும் என்னுடன் friendly ஆக சிரித்துப்பேசுவாள்..ஒருவேளை நான் கடிதம் கொடுக்காததால்தான் அந்த மரியாதையோ தெரியவில்லை :)

சரி இப்போது எங்கள் batchன் status updateக்கு விதி விலக்கான பெண்ணைப்பற்றிய சம்பவம் இது......royal college கலைவிழா invitationஐ கொடுத்து அவளையும் கலைவிழாவிற்கு அழைக்கவேண்டும் என்பது அவளுக்கு line போட்ட என் நண்பனின் அவா ,”டேய் அவள் கூப்பிட்டால் வரமாட்டாளடா” என நான் கூறினேன், அவனும் அதை ஆமோதித்து திட்டத்தைக்கைவிடும் பட்சத்தில் பக்கத்தில் இருந்தவன் உசுப்பேற்றினான் ”இல்ல மச்சான் அவளுக்கு உன் மேல interest இருக்கு சொல்லுறதற்கு வெக்கப்படுறாள்” என்றான் , இதை அவள் உன்னிடம் சொன்னாலா என நான் கேட்டபோது இவன் பார்க்காதபோது அவள் பார்த்தாள் என்றும் போன திங்களுக்கு முதல் திங்கள் இவனைப்பார்த்து சிரித்தாள் என்றும் சும்மா இருந்தவனை உசுப்பேற்றிவிட்டான். என் நண்பனோ கேட்டாய் தானே பார்த்தாய் தானே என்றான் அதன் பின் என் நியாயபூர்வமான வாதம் எடுபடவில்லை

நானும் சரி எதோ உன் தலையில் சனி விளையாடுது போல என சொல்லிக்கொண்டு நீ போய்க்கொடு என அவனிடம் invitationஐ நீட்டின்னேன், காலக்கொடுமை அவன் வெட்கப்பட்டான், ”இல்ல மச்சான் நான் publicல குடுக்கஏலாது நீ கொடு” என்றான் ,அவனவன் publicல kiss அடிக்கும் காலத்தில் இவன் invitation கொடுக்க தர்மசங்கடப்பட்டான் , சரியடா என நான் போனேன் அவன் சும்மா துணைக்கு வந்தான் , நான் போய் அவளிடம் invitation நீட்டியபோது திரு திரு வென முழித்தாள், நானும் சிரித்துக்கொண்டே நாளைக்கு எங்கட கலைவிழா என்றேன் அவளின் முகம் சிவந்து போய் பக்கத்திலிருந்தவளிடம் “என்னடி என்னவாம் ” என்றாள் , நான் அவளுக்கு காது பழுதோ என நினைத்தபோதுதான் பார்த்தேன் கால் விரல் கோலம் போடுகிறது...வெட்கமாம் அதைப்பார்த்து என் பக்கத்தில் இருந்த நாயகன் சூடானான், ”அடேய் எப்படியாவது கொடு” என்றான், சரி என்று நானும் ”கலைவிழா நல்லா இருக்கும் வரோனும்” என்றேன் , அவளோ “இல்ல பாருங்கோ படிக்க இருக்கு” என்றாள், எனக்கு மூளையில் சம்மட்டியால் அடித்தது போலிருந்தது நான் படிக்காமல் ஊர் சுற்றுகிறேன் என சொல்கிறாளா என பார்த்தேன் அவள் முகம் அதைச்சொல்லவில்லை, அவள் சிணுங்கினாள் இல்லை என்றாள் அவள் தோழி கதைத்தால், ” சனியனே வந்தால் வா வராட்டி விடு இப்போதைக்கு invitationஐ வாங்கித்தொலை” என கத்த வேண்டும் போல இருந்தது . பக்கத்திலிருந்தவன் உருகி மருகியதாலும் அவையடக்கம் கருதியும் நான் அதை சொல்லவில்லை , கடைசியாக வாங்கும்போது “try பண்ணுறன்” என்றாள், எனக்கு அவள் வருவாள் என நம்பிக்கை இருக்கவில்லை

ஆனால் வந்தாள் , எனக்கோ ஆச்சரியம், அவனோ எப்படி என்பது போல பார்த்தான் , ஆனால் அதற்குப்பிறகுதான் விதி விளையாடியது ,அவள் அவளது தோழியுடன் வந்திருந்தால் தோழியோ தன் காதலனையும் அவன் நண்பனையும் அழைத்து வந்தாள்...எனக்கு நடக்கப்போவது என்ன எனத்தெரிந்தது, imran khanம் சொன்னான் மச்சான் அவளுக்கு அவனும் line அவள் அம்மாவோட கன இடம் வாரதால set ஆகிறது கஷ்டமாய் இருந்தது , இப்ப தனிய அவை நாலு பேரும்தான் set ஆகலாம் என்று, கஷ்டப்பட்டு invitation கொடுக்க சொன்னவன் அங்கே மாய்ந்து மாய்ந்து commitee வேலை செய்தான், அவள் தோழி interval உடன் தன் காதலனுடன் வெளியே போனாள் அவர்கள் காதல் வீட்டில் தெரியக்கூடாதென்று அவள் கலைவிழாவுக்கு வந்ததாகவும் அதனாலேயே தான் வந்ததாகவும் அவள் சொன்னால், தோழி போகும் போது அவளை drop பண்ணி விடும் படி அந்த மற்றவனிடம் சொன்னாள், அதிலிருந்து அவர்கள் innings ஆரம்பம். அவன் வாங்கி கொடுப்பதும் அவள் சாப்பிடுவதும் சிரித்து சிரித்து பேசுவதுமாய் பொழுது போனது, எனக்கோ நேற்று பார்த்த அவளா இவள் என ஒரே ஆச்சர்யம், ஒரு சிணுங்கல் குலுங்கல் தயக்கம் என்பன அறவே இல்லை, துண்டு படிப்படியாக அவன் வலையில் விழுந்தது, அங்கே invitation கொடுத்தவனோ தன் துண்டு தன் கண் முன்னாலேயே அபேஸ் ஆவதைப்பார்த்து இரத்தக்கண்ணீர் வடித்தான். ஹ்ம்ம்ம்ம் எங்க்ளால்தான் என்ன செய்ய முடியும் அவனுக்காக பரிதாபப்படுவதை விட!!!

அவர்கள் இருவரும் விழா முடிந்து நடந்து போன போது அவர்களிடையிலான இடைவெளி குறைந்திருந்தது தற்செயலா அல்லது எனது பிரமையா என்று தெரியவில்லை, சரி என சோகமாக இருந்தவனைத்தேற்ற pubக்கு அழைத்துக்கொண்டு ஒரு நண்பர் குழாம் சென்றது , கொஞ்சம் குடித்தவுடன் எந்நேரமும் கதறி அழுவான் என்றே நினைத்தோம் ஆனால் அவன் என்னை வெறித்துபார்த்தபடி சொன்னான் “மச்சான் இதுக்குப்பேர்தான் சொந்த செலவில சூனியம் வைக்கிறது” உண்மைதான்.

இவற்றை நீங்களும் கடந்திருப்பீர்கள்

1) எழாம் வகுப்பில் எங்களை விட 2 அடி உயர்ந்த சக மாணவிகளையும்

2) மச்சான் நாளைக்குத்துண்டுக்கு birthday ,gold chain வாங்கினால் ந்ல்லா இருக்கும், என்னட்ட 50 ரூபா தான் இருக்கு என்று நீங்கள் வசனத்தை முடிக்க காத்திருக்கும் நண்பர்களையும்

3) LC,HFC துண்டுகளிடம் கடலை போட , free periodல் உங்களிடம் spoken english படிக்கும் தோழர்களையும்

4) எங்கள் மேல் உள்ள நம்பிக்கையால் மகள் class முடிய மட்டும் வெளியே கால் கடுக்க நிற்கும் அம்மாக்களையும்

5) யாராவது அழகான பெண்ணை நினைத்துவிட்டால், உடனே call பண்ணி அதே துண்டுக்கு line போடுறன், help பண்ணு என கேட்கும் சக மாணவனையும்

6) goya red rose, மற்றும் ஜவ்வாது சகிதம் classக்கு வந்து நாங்கள் குளிக்காமல் directஆ schoolஆல் வந்ததை நினைவுறுத்தும் பெண்களையும்

7)யாராவது அழகிய துண்டுடன் பேசி விட்டால் அன்றிரவே உங்களுக்கு phone போட்டு,” அது என்ட துண்டு , இனி பேசினால் நடக்கிறது வேற” என மிரட்டும் ஆசாமிகளையும்

8)நள்ளிரவு எழுப்பி , உங்களை துணைக்கு அழைத்து சென்று, அவன் காதலி வீட்டு சுவரில் spray paint ஆல் காவியம் எழுதும் நாயகர்களையும்

9) one side love, தொடங்கியதும் , நான் உன்னை சந்தித்தது கொழும்பு தமிழ் சங்கம், பூப்போன்ற மென்மை உன் அங்கம், அன்பே நீ ஒரு தங்கம் என கவிதையின் பெயரால் எதையோ பிதற்றி நாங்கள் அதற்கு உச்சு கொட்ட வேண்டும் என நினைப்பவனையும்

10)யாராவது வந்துவிடுவினம் நான் போகோணும் என்று தொடக்கம் முதலே சொல்லி 3 மணி நேரமாவது தொடர்ந்து கடலை போடும் நண்பனின் காதலியையும்

11)அந்த 3 மணி நேரமும் வெறும் 2 rolls 1 coke மட்டுமே வாங்கி கொடுத்து கணக்கை சமாளித்த தோழனையும்

12)என்று படிக்கும் வைராக்கியத்துடன் classக்கு போகிறோமோ அன்று பார்த்து கடைக்கண்ணால் சிரித்து message சொல்லி hopes கொடுக்கும் அழகிய பெண்களையும்

13) pocket money தட்டுப்பாட்டில் royal bakery 10 ரூபா rolls சாப்பிடலாம் என்று நினைக்கும் நாளில் bombay sweetsக்கு faluda குடிக்க போகலாமா என கேட்கும் சக மாணவிகளையும்

14) எப்படியடா மாட்டினான் என புரியாத புதிராக, உங்கள் classன் அழகான பெண்ணின் காதலனான அந்த கேனையனையும்

15) english speakin துண்டுகளுடன் பழகும் effectல் தமிழ் speaking to english speaking ஆக overnight ல் மாறிய தத்துப்பித்து english பேசும் துண்டுகளையும்

16) ஆனந்தன் sir 7-8 classல் துண்டுகள் நிறைய என்பதால் p.u.c card exchange பண்ண துடிக்கும் மற்ற batch மாணவர்களையும்

17) 05 batchல் நிறைய வடிவான துண்டுகள் இருப்பதால், வர்ணம் sir class முடியும் போது வாசலில் காத்திருக்கும் seniorஅண்ணாக்களையும் junior தம்பிகளையும்

18)அவள் உன்னைப்பார்த்தாளடா, சிரிச்சாளடா என உசுப்பேத்தி treat வாங்க துடிக்கும் அன்பர்களையும்

19) சாலையில் அவள் போனால் நானும் எதிரில் வந்தேன் என 1நிமிடம் அவள் கடந்து எதிரில் போனதை 1 நாள் முழுக்க ஒசாமா ஒபாமா சந்தித்தது போல விளக்கும் சக மாணவனையும்

20) இன்று என் love சொல்லப்போறேன் என்று சொல்லி வீறு நடை போட்டுச்சென்று சொல்லாமலே சுவற்றில் அடித்த பந்து போல் திரும்பி நடந்து வ்ந்து கடுப்பேற்றுபவனையும்

நீங்களும் என்னைப்போல் பாடசாலை நாட்களில் கடந்து வந்திருப்பீர்கள்