Wednesday, May 13, 2009

நியுடனின் விதி

அன்னையர் தினம் எனக்கும் எனது நண்பன் கீர்திக்கும் இருதி கிரிமை நாலக அமைந்திருகும்... மோட்டார் சைக்கிலில் அம்மா மாருக்கு எதாச்சும் வாங்கலாம் என்று நினைத்து புறப்பட்டோம்...... அடை மழை வேறு சமிக்ஞை விளக்கில் சிவப்பு விழுந்தது.... வேகமாக வந்து கொண்டிருந்தாலும் போக்குவரத்து விதிகளை மதிக்கும் நோக்கில் நானே எனக்கு ஆப்பு வைத்துக்கொண்டேன்.... நியுடனின் விதிகளை மறந்து திடீரென்ரு தடுப்பை போட்டேன்...... அதற்கு அப்புறம் மோட்டார் சைக்கில் ஒரு பக்கம் நானும் எனது நன்பணும் ஒரு பக்கமாக கிடந்தோம்.... காரில் போன ஒரு அழகிய பெண்மணி இறங்கி வந்து பதட்டத்துடன் என்ன ஆச்சு உதவி வேண்டுமா என்று கேட்டாள் பதில் சொல்லும் நிலையில் நான் இல்லை நண்பன் பெரிய தெனாவெட்டாக NO THANKS ALOT என்று அவளை அனுப்பி விட்டான்..... அப்புறம் வண்டியையும் எடுத்து கொண்டு HOSPITAL போய் மருந்து போட்டுக்கொண்டு வீடு வந்தோம் ஆனால் இன்னும் உடல் வலி குறைந்ததாக இல்லை நண்பர்களே தயவு செய்து எக்காரணம் கொண்டும் நியுடனின் விதிகளை மீறவேண்டாம் அதுவும் மழை நேரதில் வேண்டாம்

Saturday, May 9, 2009

மொக்கப்பாண்டி!!!

மொக்கப்பாண்டி என்பது யாரோ என நினைத்துவிடவேண்டாம், எல்லாம் ஒரு code wordதான் ஆகவே அவர்களைப்பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள மேலே படிக்கவும்

cigarrete தண்ணி அடிக்காமல் நல்ல பிள்ளை image வச்சிருந்தா துண்டு மாட்டிடும் எண்டு கேனைத்தனம்மாக நம்பி இருப்பம், அவளுகளும் நல்லாப்பழகி cute boyஎண்டு சொல்லி hopes எல்லாம் கொடுப்பாளுகள், கடைசியில பார்த்தா ஒரு chain smoker பொடியனுக்குத்தான் எங்களை விட அழகாக இருக்கிறான் என்ற ஒரே காரணத்துக்காக(!!!???!!) setஆவாள், ஏனென்றால் தமிழ் படங்களில் எல்லா heroineம் குடிகார heroக்களை திருத்துபவர்களாக இருப்பதால் junior thrisha, nayanthara, shreya ஆக இதுவே எளிய முயற்சி. பீமா, காக்க காக்க பார்த்த feverல் gymக்கு போனமே அதுபோலத்தான் இதுவும் so.... நடந்ததென்ன எனத்தெரியாமல் classக்கு போவோம் அந்த நண்பன் வந்து துண்டுமாட்டிட்டன் என்றால் யார் என்ன எனக்கேட்காமல் எங்கள் வாழ்த்துமழைகளைப்பொழிந்து பிறகு அது நாங்க line போட்டதுண்டு எனத்தெரிந்ததும் மனதுக்குள் சுனாமி அடிக்க அவனுக்கு கடனாக சிரித்துக்கொண்டே 1000ரூபா கொடுப்பது ஒரு கலை. (1000 ரூபா என்றதும் திகைப்படைய வேண்டாம் முதல் மாதம் மட்டுமே இந்த செலவு பிறகு செல்ல செல்ல வாரம் ஒருமுறை royalbeakery மாதம் ஒருமுறை roxy concord மற்ற நேரங்களில் இருக்கவே இருக்கிறது wellawatte beach என செலவைக்கட்டுப்படுத்தி love பண்ணுவது ஒரு பெரிய விடயமே இல்லை....ஆனால் குறைந்த budgetல் துண்டு maintain பண்ணுவது local sector தமிழ் துண்டுகளிடம் மட்டுமே செல்லுபடியாகும் இதை எல்லாம் சிங்கள துண்டுகளிடம் use பண்ணினால் சின்னப்புள்ளத்தனமாக இருக்கும்)

1000 ரூபாவில் எங்கள் கண் முன்னாலேயே rolls cokeஎன உள்ளே தள்ளி கெக்கே பிக்கே என சிரித்துப்பேசும்போது ”அடியேய் எல்லாம் என் காசுடி” எனக்கத்த தோன்றினாலும் மனதை ஆசுவாசப்படுத்தி mood changeக்கு படத்துக்குப்போவோம், intervalக்கு எழும்பும்போதுதான் அந்த நாயும் துண்டுடன் பின் seatல் இருந்தது தெரியும், அவள் சட்டையின் மேல் பொத்தான்களை மீண்டும் போடுவதும் முதுகுக்குப்பின்னால் கைவிட்டு உள்ளாடைகளை கொஞ்சம் சரி செய்வதும் என கண்கொள்ளாக்காட்சிகளைக்காணும் போது அவன் எங்களைப்பார்த்து சிரித்துக்கொண்டு ”என்ன மச்சான் இந்தப்பக்கம்” என்பான், அப்போது எங்கள் இதயம் போகும் போக்கை நான் சொல்லியா தெரிய வேண்டும்!!!!! சரி என interval முடிந்து திரும்பி படம் பார்க்கதொடங்கியதும் கண் மட்டுமே screenஐப்பார்க்கும் இதர புலன்கள் பின் seatல் இருக்கும். அவளின் சிணுங்கல்களும் முனகல்கலும் முத்தச்சத்தங்களும் dtsஐயும் மீறி எங்களுக்கு கேட்கும். (கற்பழிப்புக்காட்சிகள் வந்தால் தொலைந்தோம், பின்னால் இருக்கிற நாய்கள் மூடுக்கு வந்து -------அவளின் கைகள் எங்கள் மேலே கூட விழும், படம் முடிந்ததும் மன்னிப்பும் கேட்பாள்)தாங்கமுடியாமல் படத்தின் சோகக்காட்சியிலோ யாரோ ஒருவர் screenல் அடிபடும்போதோ எங்களையும் மீறி கண்ணீர் வரும்போது பக்கத்திலிருக்கும் நண்பன் உண்மையிலேயே படத்தோடு ஒன்றி கண்ணீர் விட்டுக்கடுப்பேற்றுவான்.
எதேச்சையாக beech பக்கம் போகும் போது அவர்கள் இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டிருப்பது, விகாரை lane மற்றும் வெள்ளவத்தை பெரிய அரச மரங்களுக்குப்பின்னால் அவர்கள் முத்தமிட்டுக்கொண்டிருப்பது போன்ற காட்சிகளை கண்டு நொந்து noodles ஆகி கோவிலுக்குப்போய் கும்பிட்டால் பிள்ளையார் சிரித்துக்கொண்டிருப்பார், சரி எங்கும் போகாமல் வீட்டில் இருப்போம் என்று பார்த்தால் அந்த seasonல் தான்shakthi tvல் ராமராஜன், டி.ராஜேந்தர், ராஜ்கிரண் நடித்த மாட்டுக்காரன் காதல் ,பாட்டுக்காரன் காதல், godzilla காதல் என காட்டுவான். இதை விட பெரிய கூத்து என்னவென்றால் எனக்கு தெரிந்த ஒரு பெண் ஒவ்வொரு வியாழனும் கோவில் செல்வாள், குடும்பமே ஒரு பக்திப்பழம், கொஞ்சம் பெரிய பக்திப்பழம்....பக்திப்பலாப்பழம் என்று வைத்துக்கொள்ளுங்களேன் அவள் bf அவளுடன் வெளியில் சுற்றுவதற்காக வயதுக்கு வந்தவர்கள் மட்டும் வகைப்படங்களை downloadசெய்து cdயில் write பண்ணி அதை yr 8 and below பொடியளுக்கு விற்று காசு சேர்த்து அவளை ஒவ்வொரு வியாழனும் கோவிலில் pickup பண்ணி ஊர் சுற்றுவான் , என்னடா இப்படி நடக்குதெண்டு பார்த்தால் அவன் எல்லாம் திருந்தி தண்ணி அடிக்கிறதை விட்டு நல்வழி செல்லத்தொடங்கி இருப்பான்,நாங்கள் அப்போதுதான் குடிப்பருவத்தை அடைந்திருப்போம் சரி துண்டு ஏதோ செய்யுது என நினைத்தால், திடீரென barல் தாடியுடன் இருப்பான். கேட்டால் love failure இப்ப என்னோட அவள் கதைக்கிறதில்ல என சோகப்பாட்டுப்பாடுவான், சரியடா என அவனுக்காக கதைக்கப்போனால் அவள் அப்போதுதான் அவன் குடிப்பான் அது இது என புராணம் பாடுவாள், இதெல்லாம் நடந்தது தானே இப்ப அவன் குடிக்கிறது இல்லை என்றாள் , அம்மாவுக்குப்பிடிக்காது ஆச்சிக்குப்பிடிக்காது என சொல்வாள்(அதற்காக theatreல் நடந்த கூத்தெல்லாம் அம்மாவுக்கு பிடித்தா நடந்தது என கேட்கக்கூடாது , இவை புது bf கிடைத்ததும் பழைய bfஐ கழட்டுவதற்காக வந்த திடீர் ஞானோதயம்).

இதற்கும் மேலாக ஒன்று சொல்வாள் “அவருக்கு நிறைய கெட்டபழக்கம் உங்களை மாதிரி எல்லாம் இல்லை” !!!!நாங்கள் அவனைக்கண்டதே barல்தான் என்றா சொல்லமுடியும்??? நல்ல வேளை இவன் மாட்டினான், இல்லாவிட்டால் எங்களுக்குத்தான் இந்த நிலமை என நினைத்துக்கொண்டு அவனை சாந்தப்படுத்தி...எங்களை இப்படி இக்கட்டில் போடாததற்கு நன்றி என கோவிலில் கும்பிடப்போனால் இப்போதும் அந்த பிள்ளையார் சிரித்துக்கொண்டிருப்பார்!!

இப்போது மொக்கப்பாண்டி யாரென்பது புரிந்திருக்கும்

Friday, April 17, 2009

ஒரு தேநீர் அனுபவம்

மச்சான் எப்படி என்று என் முதுகின் மேல் ஒரு அடி விழுந்தது, நான் படம் பார்த்துவிட்டு மாலனுடன் வீடு செல்லும் வழியில் ஏதாவது கொறிக்கலாம் என்று போனேன், நடுவில் இவன் நெடுநாளுக்குப்பின் என் பழைய நண்பன். நிறைய பேருடன் இருந்தான், ஒரு பெண்ணை அழைத்து நாங்கள் இருந்த tableலேயே இருந்து அளவளாவினான், எதோ clubமூலம் காலி trip, சுனாமி ஆதாரமாக எதோ என்றான், சிறிது நேரத்தில் மச்சான் என் துண்டு வந்திருக்கு இவள் யாரென்று கேட்டாள் club memberஎண்டு சொல்லன் எண்டான், அப்ப இவள் உண்ட துண்டில்லையா எனக்கேட்க கண்ணடித்து உனக்குத்தெரியாதா tsunami tripல ஒரு fun எடுக்கல்லாமே எண்டுதான் என்றுவிட்டு எந்தன் பதிலுக்கு நிக்காமல் நகர்ந்தான்.
அப்போதுதான் அவளைக்கவனித்தேன் அவள் அணிந்திருந்த மேல் நாட்டு உடைக்கும் அவள் தோற்றத்துக்கும் துளியும் சம்பந்தம் இல்லை, ஆனால் அதிக முகப்பூச்சு இல்லாமல் சாதரணமாக இருந்தால், பார்க்கும் யாரும் அவளை அப்படி நினைக்கமாட்டார்கள், எங்களை விட வயது ஒன்றிரண்டு அதிகம் இருக்கலாம், sangam class வரும் பெண்போலத்தான் இருந்தாள் அவள் கண்களில் இன்னும் அந்த restaurant பற்றிய பிரமிப்பு தெரிந்தது, நாங்கள் கேட்ட சாப்பாடு வந்தது, எனக்கு அங்கிருப்பது கொஞ்சம் அருவருப்பாக இருந்தது இருப்பினும் அவன் அவன் gfஐ அனுப்பி விட்டு வருமட்டும் நகர ஏலாது, மாலனுக்கு இருப்புக்கொள்ளவில்லை மெதுவாக பேச்சுக்கொடுத்தான், அவள் விபரம் வரலாறு என அறிந்துகொண்டான். அவளும் மெதுவாக சகஜமாக பேசினால் ஆனால் சார் சார் என்று பேசி தர்மசங்கடப்படுத்தினால், நானும் அந்த நாய் எப்பொது துண்டை அனுப்பும் இந்த நாய் எப்போது கடலை போட்டு முடிக்கும் என இருந்தேன்.

அவள் மெதுவாக என் பக்கம் திரும்பி, ”பேச மாட்டியா சார்” என்றாள், மாலன் அவன் அப்படித்தான் என்றான், அவள் என்னை ஆச்சர்யமாகப்பார்த்தாள், எனக்கு அங்கிருந்து கழறலாம் போலிருந்தது, மாலன் படம் பார்த்ததையும் என் treat என்பதையும் சொல்லியிருந்தான், “birthdayஆ சார்” நான் பேசாமலிருந்தாலும் விடமாட்டாள், இல்லை என்றேன். அவள் plateல் eclair முடிந்துவிட்டது, ”இந்த நீள சமோசா இன்னொன்னு சொல்லேன் நல்லா இருக்குது” என்றாள், ”அது அவன் gfஆ சார், அழகா இருக்கு மனீஷா மாதிரி பின்ன ஏன் என்கிட்ட வாரான் ”என்றாள், அவள் எவ்வளவோ கேள்விகள் கேட்டாள் மாலன் எல்லாவற்றுக்கும் விடை சொன்னான் , இந்தமாதிரி பெரிய இடங்களில்தான் சாப்பிடுவீங்களா என்றாள், அவளுக்கு அங்கே இருப்பவர்களும் உணவு முறையும் விசித்திரமாய் இருந்தது, இங்க சாப்பிட்டுக்கூடவா இப்படி ஒல்லியாக இருக்கிறாய் என என்னைப்பார்த்து ஆச்சரியப்பட்டாள், ”கஞ்சா அடிப்பியா சார்” நான் இல்லை என தலையாட்டினேன், ”பின்ன ஏன் சார் இப்படி இருக்காய்” என்று எனக்காக பரிதாபப்பட்டாள், genetics என்றேன், ”அது கஞ்சா மாதிரியா சார்”, அவளுக்கு ஒல்லியாய் இருப்பவன் பிச்சைக்காரனாய் அல்லது போதைப்பழக்கமானவனாய் இருக்க வேண்டும், நான் விவாதிக்கவில்லை. அவள் வாழ்க்கை வரலாறு கூறி முடித்து உங்கள மாதிரி இருக்க அதிஷ்டம் வேணும் என்றாள், உண்மைதான் 19வயது மட்டும் அம்மா ஊட்டி சாப்பிட்டவன் நானாகத்தான் இருப்பேன், “எங்களுக்கு எவ்வளவு கஷ்டம் உன்னைப்பாரு சார் ”, எனக்கும் சேர்த்து என் அப்பா வேலை செய்கிறார் என சொல்லிக்கொண்டிருக்கவில்லை, நான் அதிஷ்டசாலிதான் என் தங்கையே அவளைவிட என்னையே அம்மா செல்லம் கொடுப்பதாக குறைபட்டுக்கொள்வாள்.
நான் என் தேநீரை முடித்துக்கொண்ட போது என் நண்பன் வந்தான் தன் காதலியை அறிமுகப்படுத்தினான், பின் அவளை வழியனுப்பி என்னிடம் நன்றி சொன்னான், club tripக்கு கிளம்பும்போது அவளை ”ஏய் வா” என ஏக வசனத்திலழைத்தான்,எங்களுடன் சிரித்துப்பேசும் அவனிடம் அப்படி ஒரு காட்டு நாகரிகத்தை நான் எதிர்பார்க்கவில்லை, அவள் முகத்தில் இருந்த கலகலப்பு எல்லாம் போய் முகம் இறுகி...வாரன் சார் என்றாள், மாலன் எதோ சொன்னான், ”அந்த சமோசா பேரென்ன சார்???” eclairஎன்றேன், இன்னொரு தரம் வந்தா சாப்பிடணும் சார் என்றாள், போகும் போது என்னைப்பார்த்து சிரித்தாள், நான் பதிலுக்கு சிரிக்காவிடினும் எனக்கு இப்போது அவள் அருவருப்பாக தெரியவில்லை, அவளுக்கும் அது விளங்கியது.

அவன் tripபோய் 2ம் நாள் அவன் காதலியை இன்னொருவனோடு theatre பொக்ஸில் பார்த்தேன் நானாக பற்றவைக்காவிடினும் காலப்போக்கில் அவளைப்பற்றி அவனும் அவனைப்பற்றி அவளும் அறிந்து கொண்டு சண்டை போட்டு பிரிந்துகொண்டனர், அவள் அழுதுகொண்டே சபித்ததாயும் இவன் கடுப்பாகி அவளின் அன்னியோன்ய படங்களை வலைத்தளங்களில் பதிவு செய்தும் நாராசாரமாக அவ்வுறவு முடிந்தது, சென்ற வாரம் தான் அவளை melbourneல் பார்த்தேன், என்னைக்கண்டு ஓடி வந்து கதைத்தாள், சற்றே பெருத்திருந்தாள், அவள் புதுக்காதலனை அறிமுகப்படுத்தினால் எங்கயோ பார்த்தவனாயிற்றே என யோசிக்க, என்ன ஞாபகம் இல்லையா என்னை இவனுடன் theatreல் பார்த்தாயே என்றாள், அப்போதுதான் பொறி தட்டியது.

நான் அவளைப்பார்த்து நான் எதுவும் சொல்லவில்லை என்றேன் அவளும் தெரியும் நன்றி என்றாள்...சகஜமாகப்பேசினாள் வீட்டிற்கு வெசாக்கிற்கு வருமாறு அழைத்தாள், நான் சிரித்துக்கொண்டு விடை பெற்றேன், சிலரை எப்படி எல்லாம் எதிர்பாராத சந்தர்ப்பங்களில் சந்திக்க நேர்கிறது!!

Friday, March 27, 2009

ஜீவா விடு தூது!!!!

எங்கள் classன் அந்த அழகிய பெண் rolls சாப்பிடும் styleஐ அப்படியே பார்த்துக்கொண்டு இருக்கலாம். ஒரு மாலை நேரம் அவள் அந்த rollsஐ வாய்க்கருகில் கொண்டு வந்து வாயை மெதுவாக திறந்து சிறிதளவு பாகத்தை மட்டும் மெதுவாக கடித்து அதை அவள் நாவினால் வலதும் இடதுமாக தள்ளி தள்ளி விளையாடி சாப்பிடும்போது பார்த்துக்கொண்டிருக்கும் class பொடியளின் இதயமும் வலதும் இடதுமாக இடம்பெயரும் ஒரு feel.....;)

அந்த கண்கொள்ளாக்காட்சி நடைபெறும் போது நாரசாரமாக ஒரு இடையூறு

“மச்சான்”
”என்னடா”
“நான் அவளுக்கு try ஒன்டு போடலாம் எண்டு இருக்கிறன்”
”யாருக்கு ----கா??”
அவளை இவன் love பண்ணுவது நடவாத காரியம் என்றதாலேயே அதிர்ச்சியுடன் அந்த கேள்வியை கேட்டேன்

“இல்ல மச்சான் அவளுக்கு பக்கத்துல styleஆ eclair சாப்பிடுறாளே”
அவன் சொன்ன திசை நோக்கிப்பார்த்தேன். அழகான பெண்தான் ஆனால் அவள் eclair சாப்பிடுவது discovery channel ல் ஒட்டகம் வெறும்வாயை மெல்லும் போது closeupல் பார்த்திருப்பீர்களே அதைப்போலத்தான் இருந்தது.
“அதுல என்னடா இழவு styleee?” நான் அதிர்ச்சியுடன் கேட்டேன்
”சும்மா இரு”

பிறகு தொடங்கியது படலம் அவன் அவள் detail தேடி அலைந்ததும் class முடிய followபண்ணுவதுமாக அவன் காலத்தை ஓட்டி கடைசியில் காதலை சொல்வதென முடிவெடுத்தான். இங்குதான் நாம் நம்மவர்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும், follow பண்ணும்போதும் அவளுக்காக தெருச்சண்டைகளில் இறங்கும்போது உள்ள தைரியம் அவளிடம் காதலை சொல்லப்போகும்போது காணாமல் போய்விடும், காதலைச்சொல்ல அவளருகில் சென்று நாக்குத்தள்ளி இன்னொருநாள் சொல்வோம் என பயத்துடன் திரும்பியவர்கள் ஏராளம், அதனாலேயே அந்நியன் படத்தின் பாடல் வரிகள் “அந்தக்கடவுளை விடவும் பெரியவன் ஒருவன் பூமியிலுள்ளான் எவன்? பெண் கண்களைப்பார்த்துக்காதலை சொல்லும் தைரியமுள்ளவன் அவன்” அவ்வளவு யதார்தத்தைக்காட்டியது :) இவ்வகையான சந்தர்பத்திலேயே நண்பர்கள் தூதுவர்கள் ஆவார்கள். நானும் ஆனேன்

rudra mawatha அவளின்class முடிய மட்டும் wait பண்ணி அவளிடம் சொல்ல வேண்டும். நான் கொண்டுவரப்போகும் resultஐ எதிர்பார்த்து அவன் commercial bank அடியில் காத்திருந்தான், நான் நிற்கும் போது ஒரு seniorவந்து ”என்ன தம்பி இங்க” எண்டான் நான் ஒன்டும் சொல்லாமல் இருக்க “ஆ ஆ விளங்குது ” என்று என்னை பார்த்து சிரித்துவிட்டுப்போனான். அவனும் இப்படி அவன் துண்டுக்கு watchman வேலை பார்க்கவே போய்க்கொண்டிருப்பான், இருந்தும் ஒரு நக்கல் ஏதோ அவன் படிக்கப்போகிற மாதிரி. class முடியும் நேரம், நான் விறு விறு என pucக்குள் போய் அவள் class அடியில் நின்றேன் (roadல் இருந்து இந்த riskஆன வேலை பார்க்க முடியாது தெரிந்தவர்கள் வந்தால் அவமானம்)
class முடிந்து அவள் தோழிகளோடு வந்தாள்

“excuse me”.
"என்ன??"
“erm ....வந்து என்ட friend உங்களை love... ”
"யாரு friend??"
”-----”
“ஏன் இதை அவர் வந்து சொல்லமாட்டாரோ”
என்னிடம் அதற்கு விடையில்லை நான் அவள் முகத்தைப்பார்த்தேன்
“இல்லை அவன் கொஞ்சம் seriousஆ”
“hospitalல இருக்கிறாரா??”
அவள் என்னிடம் விளையாடுகிறாள் என நல்லாவே தெரிந்தது, நான் classல் சாந்த சொரூபி அதை விட அன்று அவ்ளுகளிடம் தனியாக மாட்டிக்கொண்டேன், card markபண்ணுற அக்காவையும் காணவில்லை அவா வந்தா தம்பி என்ன கதை கீழ போங்கோ எண்டு விரட்டி என்னைக்காப்பாற்றி இருப்பார்
அவள் சிரித்துக்கொண்டே ”எனக்காக என்ன செய்வார்???”
“என்ன செய்ய வேணும்?”
“இங்க இருந்து கீழ குதிப்பாரா??”

அலைபாயுதே வந்த feverல் எல்லா நாயும் தன்னை shalini ஆக நினத்துக்கொண்டு பயலுகளை குதிக்கவைப்பதிலேயே குறியாக இருந்தாளுகள். அதுவும் நான் நின்றுகொண்டிருந்தது 2வது மாடி!!!!!!!! அங்கிருந்து குதித்த பிறகு love இருந்தென்ன போய் என்ன???

”கேட்டுப்பார்த்துசொல்லுறன்”
”ஒண்டும் வேணாம் இனிமேல் இப்படி வந்து நிக்காதயுங்கோ” என எனக்கு படிக்கும் காலத்தில் படிப்பதன் மகத்துவம் பற்றி சொன்னாள், கலிகாலம் என் அம்மா கூட எனக்கு advice பண்ணுறதில்லை. எல்லாம் முடிந்து அவனிடம் சென்றேன்
”உது சரிவராது மச்சான் ஏலாதாம்”
“உன்னட்ட ஒரு வேலை சொன்னாள் இப்படித்தான் ஒழுங்கா ஒரு love சொல்ல முடியேல்ல”
எதோ என்னால்தான் rejectஆன மாதிரி build up விட்டான்
நான் அவனை முறைத்தேன் “சரி விடு கோவப்படாத” என்று சொல்லி அடுத்த கிழமையே என்னை மீண்டும் தூது போக சொன்னான். இம்முறை அவன் கவிதையும் எழுதி இருந்தான் நான் பிரித்து வாசித்தேன்
“அன்பே நீ ஒரு பூ
உன் நிறமோ பருப்பூ“
முதலிரண்டு வரிகள் வாசித்தவுடன் எனக்கு அவனை நினைத்து அழுவதா என்னை நினைத்து அழுவதா என்றே தெரியவில்லை!!!!$#@$@#$

Sunday, March 22, 2009

மீண்டும் உங்களை

assingmnt அது இதுவென note எழுத முடியாமல் போய்விட்டது, ஆர்த்திகா அஹல்யா என பள்ளிக்காலங்களின் posh துண்டெல்லாம் (sleeveless அணிவது local olல் மிதமிஞ்சிய கவர்ச்சி ), என் friend listல் உள்ளதை இட்டு மகிழ்ச்சி, ஆனந்தன் sir classக்கு விடிய காலமை எழும்பி போனால் எல்லாம் இழுத்திப்போர்த்திக்கொண்டு வந்து கடுப்பேற்றுவாளுகள். அப்படி எங்களை கடுப்பேற்றும் uniform வைக்காததையிட்டி LC க்கு மனங்கனிந்த பாராட்டுக்கள், இருந்தாலும் busல் போற LC பெட்டையளுக்கு deodrant பற்றிய விழிப்புணர்வு அவசியம், ஏனெனில் அந்த நரக வேதனை அனுபவித்தவனுக்கே தெரியும். சரி இனி என் நண்பன் பிரிந்தனுக்கும் எனக்குமான நட்பை பற்றி

yr8 s class, பெண்கள் மேல் ஒரு ஈர்ப்பு வந்த ஒரு காலகட்டம். நானும் விழும் வலை தெரியாமல் classக்குப்போனேன். அங்கே கிருஷ்ணமூர்த்தி பஞ்சபூதமாகி எல்லோரையும் ஒரு கை பார்க்கும், அவா அடிக்கு பயந்தே நான் நடு rowல் இருப்பேன். அந்த classல் இருந்த தத்து பித்து துண்டுகளுக்கு நடுவே ஒரு extra ordinary துண்டாய் சி-- தா-- திகழ்ந்தாள். சரி line போடலாம் என நினைக்கும் போது , பக்கத்தில் இருந்தவன் சொன்னான் machan அது எண்ட துண்டு yr7ல இருந்து tryபண்ணுறன் எண்டு, அவன் வேறு யாருமல்ல நம் உற்ற நண்பன் பி-ந்-ன் தான், சரி இவன் என்னவிட personalityயாக இருக்கிறான் என நினைத்தபோதுதான் அவள் அவனின் பக்கத்த்து வீடு என்று சொன்னான் geographically அவனுக்கு advantage இருந்ததால் நான் widraw பண்ணிக்கொண்டு, மச்சான் help வேண்டுமென்றால் சொல் என்றேன். அப்படி தொடங்கியதே எமது புனிதமான நட்பு, அவன் அந்த துண்டை பிறகு மாட்டியதும் 2007 மட்டும் அந்த துண்டு இருந்ததும் ஒரு சாதனை, எனக்கு தெரிந்து அவ்வளவு காலம் ஒரே துண்டை வைத்திருந்தவன் கிடையாது, எனவே அவனை நினைத்து பெருமை அடைகிறேன். அவனும் நான் அவனுக்கு yr 7 ,8ல் கொடுத்த துண்டு மாட்டுவதற்கான எனது ஆலோசனைகளை மறந்திருக்க மாட்டான் என எண்ணுகிறேன்.:)

yr 9ல் எமக்கு முகப்பருக்கள் வந்த போது நாம் personality பற்றி கவலைப்பட்ட காலத்தில் என் class மாணவ்ர்கள் பாவித்த beauty tipsஐ இங்கு பகிரலாம் என்று இருக்கிறேன். கருணாநிதி sir ஏதோ acid பாவிச்சால் pimples போகும் என கூற அதை அளவுக்கதிகம் பாவித்து முகத்தை சுட்டுக்கொண்டவர்கள் ஏராளம், நான் எந்த பாதிப்புமின்றி இருப்பதைக்கண்டு andrewதான் நீ மஞ்சள் பூசுகிறாய் தானே என்றான், நான் இல்லை சந்தனம் என என் ரகசியத்தை போட்டு உடைத்தேன், அன்று என் நண்பர்கள் பலர் நான் இதை அவர்களுக்கு சொல்லவில்லை என கோபித்துக்கொண்டனர், பின்னர் அவர்கள் வீட்டிலும் சந்தனகாண்டம் அரங்கேறியது. ஒருவன் butterscotch apply பண்ணினான், ஒருமுறை நான் அவன் வீடு தேடி போனபோது பக்கத்துவீட்டுப்பிள்ளை அந்த பச்சைக்கலர் அண்ணாதானே என்று கேட்குமளவிற்கு butterscotchடன் வலம் வந்தான், என் சந்தன் ideaவையே modify பண்ணி கஷ்டப்பட்டு அதில் rose,ம்ற்றும் இதர பொருட்களை அரைத்துப்போட்டு துரிதகதியில் அழகாக முற்பட்டவர்கள் நிலை அந்தோ பரிதாபம். வெள்ளவத்தையில் விற்கும் சந்தனம் கலப்படம் அதனால் முகம் எரிகிறது என ம்யூரா கோவிலடி மட்டும் நடந்து போய் தூய சந்தனம் வாங்க வைக்குமளவிற்கு சந்தன fever தொற்றிக்கொண்டது, clear white என்று ஒரு soap இருக்கு போட்ட உடனே வெள்ளை ஆகலாம் என ஒரு பரதேசியின் சொல் கேட்டு அதை பாவித்ததில் என் நெற்றியின் இரு மூலையிலும் dead skin!!!! அவனை ஏசப்போனால் அவன் முகம் முழுவதுமே ரணகளமாயிருந்தது, ஒரு உச்சுக்கொட்டிவிட்டு நாம் மீண்டும் சந்தனத்திற்கே கட்சி மாறினோம். பிறகு ஒரு fairness creamஐ random ஆக பாவிக்கத்தொடங்கி results அமோகமாக வர நண்பர்கள் அனைவரும் classroomல் புடைசூழ நின்று “சொல்லடா”, என மிரட்டியபோது என் ரகசியத்தை வெளியே விடாமல் ச்ந்தனம் மஞ்சள் கலந்து என வாயில் வந்ததை எடுத்து விட்டேன், அவர்களும் நம்ப ரகசியம் காப்பாற்றப்பட்டது. பின்னர் தான் nomarks soap சந்தைக்கு வந்தது. அதன் results நன்றாக இருந்தது. (அது வருமுன் காக்கும் வந்ததை போக்குவது கஷ்டம்). வெள்ளவத்தை pharmacyல் விற்கும் அதை எனக்குத்தெரிந்து எங்கள் class girlsஐ விட boysதான் அதிகம் purchase பண்ணீனார்கள்(AL வகுப்புகளில் ஆண்களீன் முகப்பருக்கள் பெண்களை விட குறைந்திருந்ததை நீங்கள் அவதானித்திருப்பீர்கள்). நாளுக்கு 2 முறை கரட் juice தவறாமல் அனைவரும் பருகினோம்(carrot பிடிக்காதவர்கள் மற்ற பழ வகை சாறுகளை விழுங்கினர்). முகப்பரு வராமல் இருக்க OLல் chocalate item சாப்பிடுவதை நிறுத்தும் வழக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதை இன்னும் யார் யார் பின்பற்றுகிறார்களோ தெரியவில்லை ஆனால் நான் பின்பற்றுகிறேன். இதை விட extremeஆகி மாதாமாதம் facial செய்பவனையும் எனக்கு தெரியும். nomarks ன் புதிய கண்டுபிடிப்பான one day pimple cure வந்தவுடன் பெண்களை விட எங்கள் classல் ஆண்களே அதை வரப்பிரசாதமாக க்ருதினர், ஆனால் என்ன அது ஒரே நாளில் pimplesஐ போக்கி dead skinஐ கொண்டு வரும், ஆகவே சந்தனமே மிகச்சிறந்த வரப்பிரசாதமாக மீண்டும் அதன் ஸ்தானத்தை பிடித்துக்கொண்டது. இன்னும் பல சிறு சிறு beauty secretsஐ classல் ஒவ்வொருவனும் வைத்திருந்தான், ஒருமுறை நான் ஒருவன் வீட்டிற்கு போனபோது அவன் பாலாடையால் மூடிய முகத்தைக்கண்டு பயந்து விட்டேன் , classல் வேறு யாருக்கும் இந்த beauty tips leak ஆக்கப்படாது என சத்தியம் வாங்கினான். முகம் செழிப்பாக வர ஒவ்வொரு நாளும் காலை தயிருடன் தேனைக்கலந்து சாப்பிடும் வழக்கமும் புழக்கத்திலிருந்தது, என் தங்கை அதை ஒருநாள் சாப்பிட்டு இந்த இழவை எப்படி சாப்பிடுகிறாய் என கேட்டாள். அதை தொடர்ந்து சாப்பிட்டு சளீ பிடித்ததால் அதை ஒன்று விட்டு ஒருநாள் சாப்பிட்டு பொதுநலம் கருதி அதை நண்பர்களுக்கும் சொன்னேன் :)

class ஆண்களே அழகு விஷயத்தில் இவ்வளவு கஷ்டப்பட்டு ஆராய்ச்சி செய்து செயற்பட்டபோது பெண்கள் எவ்வளவு செய்திருப்பார்கள் நினைக்கவே கண்ணைக்கட்டுகிறது!!!!!

By
JEEVA

Wednesday, March 18, 2009

இனிமையான பள்ளி நாட்கள் பாகம் 2

இப்படி எல்லாமா ஆசிரியருடன் நடந்து கொள்வார்கள்

11 ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சை நெருங்கி கொண்டிருந்த காலம். இருந்தாலும் எமது மாணவர்களின் குறும்புக்கு ஒரு அளவே இல்லாமல் சென்றுகொண்டிருந்தது. எமக்கு தமிழ் படிப்பித்த ஆசிரியர் செல்வி சுந்தரி கதிர்காமதம்பி. குள்ள உருவம். சுருட்டை முடி. ஒரு நைலெக்ஸ் சாரீ கையில் handbag உடன் என்னுமொரு பையும் வைத்திருப்பார். 35 வயது மதிக்கத்தக்க உருவம் என்றாலும் வீரகேசரி பத்திரிகையில் மணமகன் தேவை விளம்பரத்துக்கு கீழ் இவரது விளம்பரமும் பிரசுரிக்க தவறியது இல்லை. இது பல மாணவர்களுக்கு தெரியாத உண்மை. இவரை பாடசாலயில் சந்திக்கவேண்டும் என்றால் இடைவேலைக்கு 15 நிமிடங்களுக்கு முன்னால் சிற்றுண்டி சாலையில் காணலாம். கதிர கதிரா என்று இவரை செல்லமாக மாணவர் குளாம் அழைக்கும்.


நாளுக்கு நாள் ஆசிரியரது கொடுமை தாங்கவில்லை.அன்றும் வழமை போல ப்ராஜெக்ட்க்கு மேல் ப்ராஜெக்ட்ஆக தந்துகொண்டிருந்தாள் எமது ஆசிரியை கதிர்காமத்தம்பி. ஆசிரியருக்கு மிகவும் மரியாதையாக எங்களுக்கு நீங்கள் படிப்பிக்க வேண்டாம் என்று மறைமுகமாக பலவழிகளில் கூறிப்பார்தோம். அவரும் கேட்பதாக தெரியவில்லை. உடனே மாணவர் அணி செயலில் இறங்கியது. எதுக்கும் வழமை போல் ஆபித் முன்நின்றான். என்னதான் கொக்கி வெறித்தனமாக சிலவேலைகளில் எடுப்பட்டலும் ஆசிரியருக்கு அருகில் சற்று மரியாதை போல காட்டி கொள்வான். இங்க தான் நிற்கிறான் ஆபித். இருந்தாலும் தற்கொலை குண்டுதாரி போல் சிலவேளைகளில் மாட்டிவிடுவான்.


ஆபித்தின் கோபத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. உடனே சென்று கதிரா வின் சாரிக்கு ஒரு கரைக்கு நெருப்பு வைத்து விட்டான். ஆனாலும் நல்லவன். உடனேயே அதை அணைத்தும் விட்டான். பின் மனம் கேக்கவில்லை போலும் மீண்டும் சென்று அவருடைய 10 தலைமயிரை எண்ணி கத்திரிக்கோலால் வெட்டிவிட்டான். ஆனாலும் அவன் ஆசிரியருக்கு நன்மை தான் செய்திருந்தான். அவன் வெட்டியது அனைத்துமே நரை முடிகள்.

பின்பு மற்றொரு நாள் தற்செயலாக ஆசிரியர் கொண்டுவரும் மற்றபையை எமது வகுப்பு உளவுத்துறை சோதனை இட்டபொழுது அதிலிருந்து 2 சோடா போத்தல்களை ஆசிரியர் கடத்தி வீட்டுக்கு கொண்டு செல்வது புலனானது. உடனே எமது புலனாய்வு துறை அந்த 2 போத்தல்களையும் பத்திரமாக மீட்டெடுத்தது. அவருக்கு தண்ட பணமாக ஆசிரியரது handbagஇல் இருந்து 40 ரூபாயையும் அவருக்கு தெரியாமல் எடுத்துவிட்டது. அந்தபணத்தில் அன்று மாங்காய் வாங்கி உண்டதும் இந்த அடியேன் இன்னமும் மறக்கவில்லை.

ஆனாலும் எமது நியாயமான போராட்டத்தை ஆசிரியர் கேட்பதாக இல்லை. வீம்பு பிடித்து கொண்டு நின்றார். தனிநபர் போராட்டமாக இருந்தது. மாணவர் போராட்டமாக எழுச்சி பெற்றது. எல்லோரும் கூடி ஆராய்ந்து பின் ஒரு முடிவை எட்டிநோம்.. அது ஆசிரியர் வகுப்புபை விட்டு செல்லும் போது கைதட்டுவது என்று... தினம் தினம் அவரது பாடவேளை முடிந்து அவர்செல்லும் போது நாமும் கைதடடுவோம். அவரும் விடுவதாக இல்லை. மறுநாள் பாடத்துக்கு வந்துவிடுவர். எமக்கும் அவர் மீண்டும் வருவது விரக்தியை ஏற்படுத்தியது. மீண்டும் பலமாக கைதட்டுவோம். அவரும் மறுநாள் வந்துவிடுவார். இப்பொழுது நாம் புதுவித முயற்சில் ஈடுபட்டோம். அவர் செல்லும் போது இறுக்கி கத்துவது என்று...... நாளுக்கு நாள் எமது முயற்ச்சி எறும்பு ஊற கல் தேய்ந்து போல பலன் அளித்தது. இறுதியில் பக்கத்து வகுப்பு மாணவர் துணை கொண்டு எமது போராட்டத்தில் வெற்றி கோண்டோம். ஆனல் இறுதியில் மிளகு கொடுத்து மிளகாய் வாங்கிய கதையாய் போனது. அதனை வரும் வாரங்களில் எழுதுகிறேன். இப்பொழுதும் ஆசிரியரது மணமகன் தேவை விளம்பரம் பத்திரிகையில் வருவதாக ஒரு கேள்வி.......

Tuesday, March 17, 2009

சீ....கதை

நாளை முதல் நான் படிக்க முடிவெடுத்திருப்பதால் இன்றே என் தோழி ஒருவர் சம்பந்தமான கதையை எழுதுகிறேன். இக்கதைகள் யாவும் யார் மனதையும் புண்படுத்துபவை அல்ல மாறாக ஒரு நல்ல மலரும் நினைவாகவே இவற்றை நோக்க வேண்டும். மற்றும் யாருக்காவது எங்கள் schoolல் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தால் தெரியப்படுத்தவும், முட்டைக்கதை அவ்வாறு எழுதப்பட்ட ஒன்றே ceylon simran பற்றியும் printhanஉடன் yr8 பற்றியும் கதைகள் pendingல் உள்ளன, royal college தவிர்ந்த நம் நண்பர்கள் பற்றிய கதைகளும் வரவேற்கப்படுகிறன (உதாரணம்: நம் தோழி ஆர்த்தி பற்றி கதைகள் இருப்பின் எழுதலாம் அவர் அதைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளமாட்டார் ஹி ஹி ஹி), சில அன்பர்கள் நான் LCதுண்டுக்கு line போட்டு எனக்கு ஏழரை பிடித்த கதையை எழுதச்சொல்லிக்கேட்கிறார்கள், எனக்கு தொடர் கதை எழுத நேரமில்லை, ஆனால் சந்தர்ப்பம் வாய்த்தால் எழுதுவேன்.

அ--யா fever ஓய்ந்து விட்ட காலம் , அவளுக்காக என் மேசை உடைத்த மன்மதன் LC v---ya விடம் மனதைப்பறிகொடுத்திருந்த காலகட்டம், அவளைப்பற்றி சத்தியமாக எனக்கு அப்போது ஒன்றும் தெரியாது, ஆனால் அவனே என் ஆருயிர் நண்பனிடம் அவளைக்காதலிப்பதாக சொல்லியிருந்தான், என் நண்பனோ, வேணாம் அது wrong number அவள் அப்பன் govrnmntல் பெரிய அண்ணாச்சி, விளைவு விபரீதம் ஆகும் என்று சொன்ன பின்னும் கேட்காமல் அவன் line போட்டான், கடைசியில் அவள் முடியாது என்றாள், அவள் தோழி மூலம் இவன் approach பண்ணியதாக இவன் கூறிக்கொண்டாலும் அங்கே அவள் தோழி அவளிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் இது சரிவராது என சொன்னதாக நம்பகமான தகவல்கள் கூறுகிறன.
anyway இச்சம்பவத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட எம் நாயகன் கதையின் நாயகியின் எதிர் வீட்டில் இருந்த எம் நண்பரின் வீட்டிற்கு வருகை தந்தான், எம்முடன் கதைத்துக்கொண்டிருந்த அவன் திடீரென மாயமானான், பார்த்தால் வீட்டு மொட்டை மாடியில் நாயகியின் வீட்டின் பக்கம் நோக்கிக்கொண்டிருந்தான்,feelings ஆக்கும் என நினைத்தோம், பிறகுதான் தெரிந்தது, நாயகி தனக்கு கிடைக்காத வெறுப்பில் இவன் இந்த மொட்டைமாடியில் இருந்து அவள் வீட்டு மொட்டை மாடியை நோக்கி உச்சா போய்க்கொண்டிருந்தான் என்பது, காதல் தோல்வியை இவன் எதிர்கொண்ட விதம் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, இப்போது நினைத்தால் சிரிப்பாக வருகிறது :)