Friday, April 17, 2009

ஒரு தேநீர் அனுபவம்

மச்சான் எப்படி என்று என் முதுகின் மேல் ஒரு அடி விழுந்தது, நான் படம் பார்த்துவிட்டு மாலனுடன் வீடு செல்லும் வழியில் ஏதாவது கொறிக்கலாம் என்று போனேன், நடுவில் இவன் நெடுநாளுக்குப்பின் என் பழைய நண்பன். நிறைய பேருடன் இருந்தான், ஒரு பெண்ணை அழைத்து நாங்கள் இருந்த tableலேயே இருந்து அளவளாவினான், எதோ clubமூலம் காலி trip, சுனாமி ஆதாரமாக எதோ என்றான், சிறிது நேரத்தில் மச்சான் என் துண்டு வந்திருக்கு இவள் யாரென்று கேட்டாள் club memberஎண்டு சொல்லன் எண்டான், அப்ப இவள் உண்ட துண்டில்லையா எனக்கேட்க கண்ணடித்து உனக்குத்தெரியாதா tsunami tripல ஒரு fun எடுக்கல்லாமே எண்டுதான் என்றுவிட்டு எந்தன் பதிலுக்கு நிக்காமல் நகர்ந்தான்.
அப்போதுதான் அவளைக்கவனித்தேன் அவள் அணிந்திருந்த மேல் நாட்டு உடைக்கும் அவள் தோற்றத்துக்கும் துளியும் சம்பந்தம் இல்லை, ஆனால் அதிக முகப்பூச்சு இல்லாமல் சாதரணமாக இருந்தால், பார்க்கும் யாரும் அவளை அப்படி நினைக்கமாட்டார்கள், எங்களை விட வயது ஒன்றிரண்டு அதிகம் இருக்கலாம், sangam class வரும் பெண்போலத்தான் இருந்தாள் அவள் கண்களில் இன்னும் அந்த restaurant பற்றிய பிரமிப்பு தெரிந்தது, நாங்கள் கேட்ட சாப்பாடு வந்தது, எனக்கு அங்கிருப்பது கொஞ்சம் அருவருப்பாக இருந்தது இருப்பினும் அவன் அவன் gfஐ அனுப்பி விட்டு வருமட்டும் நகர ஏலாது, மாலனுக்கு இருப்புக்கொள்ளவில்லை மெதுவாக பேச்சுக்கொடுத்தான், அவள் விபரம் வரலாறு என அறிந்துகொண்டான். அவளும் மெதுவாக சகஜமாக பேசினால் ஆனால் சார் சார் என்று பேசி தர்மசங்கடப்படுத்தினால், நானும் அந்த நாய் எப்பொது துண்டை அனுப்பும் இந்த நாய் எப்போது கடலை போட்டு முடிக்கும் என இருந்தேன்.

அவள் மெதுவாக என் பக்கம் திரும்பி, ”பேச மாட்டியா சார்” என்றாள், மாலன் அவன் அப்படித்தான் என்றான், அவள் என்னை ஆச்சர்யமாகப்பார்த்தாள், எனக்கு அங்கிருந்து கழறலாம் போலிருந்தது, மாலன் படம் பார்த்ததையும் என் treat என்பதையும் சொல்லியிருந்தான், “birthdayஆ சார்” நான் பேசாமலிருந்தாலும் விடமாட்டாள், இல்லை என்றேன். அவள் plateல் eclair முடிந்துவிட்டது, ”இந்த நீள சமோசா இன்னொன்னு சொல்லேன் நல்லா இருக்குது” என்றாள், ”அது அவன் gfஆ சார், அழகா இருக்கு மனீஷா மாதிரி பின்ன ஏன் என்கிட்ட வாரான் ”என்றாள், அவள் எவ்வளவோ கேள்விகள் கேட்டாள் மாலன் எல்லாவற்றுக்கும் விடை சொன்னான் , இந்தமாதிரி பெரிய இடங்களில்தான் சாப்பிடுவீங்களா என்றாள், அவளுக்கு அங்கே இருப்பவர்களும் உணவு முறையும் விசித்திரமாய் இருந்தது, இங்க சாப்பிட்டுக்கூடவா இப்படி ஒல்லியாக இருக்கிறாய் என என்னைப்பார்த்து ஆச்சரியப்பட்டாள், ”கஞ்சா அடிப்பியா சார்” நான் இல்லை என தலையாட்டினேன், ”பின்ன ஏன் சார் இப்படி இருக்காய்” என்று எனக்காக பரிதாபப்பட்டாள், genetics என்றேன், ”அது கஞ்சா மாதிரியா சார்”, அவளுக்கு ஒல்லியாய் இருப்பவன் பிச்சைக்காரனாய் அல்லது போதைப்பழக்கமானவனாய் இருக்க வேண்டும், நான் விவாதிக்கவில்லை. அவள் வாழ்க்கை வரலாறு கூறி முடித்து உங்கள மாதிரி இருக்க அதிஷ்டம் வேணும் என்றாள், உண்மைதான் 19வயது மட்டும் அம்மா ஊட்டி சாப்பிட்டவன் நானாகத்தான் இருப்பேன், “எங்களுக்கு எவ்வளவு கஷ்டம் உன்னைப்பாரு சார் ”, எனக்கும் சேர்த்து என் அப்பா வேலை செய்கிறார் என சொல்லிக்கொண்டிருக்கவில்லை, நான் அதிஷ்டசாலிதான் என் தங்கையே அவளைவிட என்னையே அம்மா செல்லம் கொடுப்பதாக குறைபட்டுக்கொள்வாள்.
நான் என் தேநீரை முடித்துக்கொண்ட போது என் நண்பன் வந்தான் தன் காதலியை அறிமுகப்படுத்தினான், பின் அவளை வழியனுப்பி என்னிடம் நன்றி சொன்னான், club tripக்கு கிளம்பும்போது அவளை ”ஏய் வா” என ஏக வசனத்திலழைத்தான்,எங்களுடன் சிரித்துப்பேசும் அவனிடம் அப்படி ஒரு காட்டு நாகரிகத்தை நான் எதிர்பார்க்கவில்லை, அவள் முகத்தில் இருந்த கலகலப்பு எல்லாம் போய் முகம் இறுகி...வாரன் சார் என்றாள், மாலன் எதோ சொன்னான், ”அந்த சமோசா பேரென்ன சார்???” eclairஎன்றேன், இன்னொரு தரம் வந்தா சாப்பிடணும் சார் என்றாள், போகும் போது என்னைப்பார்த்து சிரித்தாள், நான் பதிலுக்கு சிரிக்காவிடினும் எனக்கு இப்போது அவள் அருவருப்பாக தெரியவில்லை, அவளுக்கும் அது விளங்கியது.

அவன் tripபோய் 2ம் நாள் அவன் காதலியை இன்னொருவனோடு theatre பொக்ஸில் பார்த்தேன் நானாக பற்றவைக்காவிடினும் காலப்போக்கில் அவளைப்பற்றி அவனும் அவனைப்பற்றி அவளும் அறிந்து கொண்டு சண்டை போட்டு பிரிந்துகொண்டனர், அவள் அழுதுகொண்டே சபித்ததாயும் இவன் கடுப்பாகி அவளின் அன்னியோன்ய படங்களை வலைத்தளங்களில் பதிவு செய்தும் நாராசாரமாக அவ்வுறவு முடிந்தது, சென்ற வாரம் தான் அவளை melbourneல் பார்த்தேன், என்னைக்கண்டு ஓடி வந்து கதைத்தாள், சற்றே பெருத்திருந்தாள், அவள் புதுக்காதலனை அறிமுகப்படுத்தினால் எங்கயோ பார்த்தவனாயிற்றே என யோசிக்க, என்ன ஞாபகம் இல்லையா என்னை இவனுடன் theatreல் பார்த்தாயே என்றாள், அப்போதுதான் பொறி தட்டியது.

நான் அவளைப்பார்த்து நான் எதுவும் சொல்லவில்லை என்றேன் அவளும் தெரியும் நன்றி என்றாள்...சகஜமாகப்பேசினாள் வீட்டிற்கு வெசாக்கிற்கு வருமாறு அழைத்தாள், நான் சிரித்துக்கொண்டு விடை பெற்றேன், சிலரை எப்படி எல்லாம் எதிர்பாராத சந்தர்ப்பங்களில் சந்திக்க நேர்கிறது!!

No comments:

Post a Comment